கடலூரில் நீட்தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூரில் நீட்தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
X

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ,மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு அங்கீகரிக்க கோரியும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர கோரியும், கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உரையாற்றினார்கள். முன்னதாக பகத்சிங் பிறந்த தினமான இன்று அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.

Next Story