சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீரராகவன் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன், அவரது மனைவி செந்தாமரைச் செல்வி.
கடந்த மாதம் 24ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோதண்டராமன் மற்றும் அவரது மனைவி செந்தாமரைச்செல்வி இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி கோதண்டராமன் இறந்தார். அவரது மனைவி செந்தாமரைசெல்வி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 2:00 மணி அளவில் மருத்துவமனையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த சி.பி.ஆர். இயந்திரம் இயங்காததால் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் பணியிலிருந்த மருத்துவரை அழைத்து வர சென்றுள்ளனர். அங்கு பணியில் மருத்துவர் இல்லாததால் காலதாமதம் ஆகியுள்ளது. இதனால் பல மணிநேரம் போராடியும் செந்தாமரைச் செல்வி உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து பழுதான சி.பி.ஆர். இயந்திரத்தை மாற்ற மருத்துவர்கள் இல்லாததாலும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செந்தாமரைச் செல்வி உயிரிழந்ததாக அவரது மகன் சீனிவாசன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சிதம்பரம் நகர மக்கள் ராஜா முத்தையா மருத்துவமனை மீது குற்றச் சாட்டினை வைத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu