/* */

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை: எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின் சார்பில் வெளியீடு

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின் சார்பில் நேற்று கல்லூரியில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிக்கை: எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின் சார்பில் வெளியீடு
X

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரியில்  தேசிய குடும்பநல கணக்கெடுப்பு அறிககை எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டது..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் குடும்ப நலம் பற்றிய கணக்கெடுப்பு பணி ஆய்வை நடத்தியது. அதன் இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு-5 ன் படி நாட்டில் மக்கள்தொகை தகவல் அடிப்படியில் மக்களுக்கான சுகாதாரம், ஊட்டசத்து பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் பணி நடக்கிறது.மேலும் பாலற்பள்ளி, இயலாமை, கழிப்பிட வசதி, இறப்பு பதிவு, கருக்கலைப்பு ஆகியவை பற்றியும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி இந்த கணக்கெடுப்பு பணியினை நடத்த அறிவுறுதப்பட்டது.

அதன்படி எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இது சம்மந்தமான கணக்கெடுப்பு நடத்தியது. அப்பகுதிகளில் உள்ள 27, 929 வீடுகளில் 25,650 பெண்கள், 3,372 ஆண்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 3,520 பெண்கள் 534 ஆண்கள் ஆகியோரின் ரத்த அழுத்தம், ரத்த குளுக்கோஸ் அளவு ஆய்வு செய்யபட்டு வயதின் அளவுக்கு ஏற்ப இருக்கவேண்டிய எடை, ரத்த அழுத்தம், ரத்த குளுக்கோஸ் அளவு பற்றி விளக்கி கூறப்பட்டது.

எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி குடும்ப நலம் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கொரொனா தொற்றுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் பி. குகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெளியிட்டார். இதில் மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கே.எஸ்.ஜேம்ஸ் காணொளி காட்சி மூலம் முக்கிய உரை நிகழ்த்தினார்.

Updated On: 22 Dec 2021 9:00 AM GMT

Related News