சிவராத்திரியையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியாஞ்சலி ரத்து : தமிழக அரசு விளக்கம்

சிவராத்திரியையொட்டி தஞ்சை பெரிய கோயிலில்  நாட்டியாஞ்சலி ரத்து : தமிழக அரசு விளக்கம்
X
Brahadeshwarar Temple News தஞ்சை பெரிய கோயிலினுள் நடந்து வந்த இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியானது திமுக அரசு அனுமதி அளிக்காததால்தான் வெளியே நடத்தப்பட்டுள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Brahadeshwarar Temple News

தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் அமைப்பினர் சார்பில் எந்தவொரு நிகழ்ச்சிகளும் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரிய கோயிலுக்கு வெளியே மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டநிலையில் அங்கு நடத்திக்கொள்ள தொல்லியல் துறை தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இந்த ஆண்டின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியானது கோவில் வளாகத்தில் நடக்காமல் கலையரங்கில் நடந்தது.

Brahadeshwarar Temple News



தஞ்சை பெரிய கோயிலினுள் நடந்து வந்த இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியானது திமுக அரசு அனுமதி அளிக்காததால்தான் வெளியே நடத்தப்பட்டுள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, தன் அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது என்ற தகவல் வதந்தியாக கருதப்படுகிறது.நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கவில்லை. ஆனால் அனுமதி மறுத்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை தான்.

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த நாட்டியாஞ்சாலி நிகழ்ச்சியை கோயில் வளாகத்துக்குள் நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால்தான் கோயில் வளாகத்தில் நடக்கவில்லை. எனவே அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது .

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை,

தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் நாட்டியாஞ்சலி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என காரணம் கூறி திமுக அரசு அனுமதி மறுத்துவிட்டது.தற்போது தன் ஹிந்துமத விரோத போக்கு மக்களுக்குதெரியவந்தது இதற்கு சம்பந்தமே இல்லாதது போல் தொல்லியல்துறையின் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறது.

கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்த அனுமதி மறுத்துவிட்டு பல ஆண்டுகளாக இல்லாத வகையில் அவசர கதியில் தொல்லியல் துறைக்கு ஒரு கடிதம் எழுதி அதற்கு கிடைத்த பதில் கடிதத்தை காரணம் காட்டி பழியை தொல்லியல் துறையின் மீது போட்டிருப்பது திமுக அரசின் வெட்கக்கேடான செயலாகும்.

Brahadeshwarar Temple News


நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தொல்லியல் துறையின் அனுமதி பெறுவது தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் தானே தவிர, தனியார் நிறுவனங்கள் நேரடியாக அனுமதி கோருவது இல்லை. மேலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் உபயதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சி தானே தவிர, தனியார் நிகழ்ச்சி அல்ல. இதை மறைத்து , புதிய கதை கூறியிருக்கிறது திமுகவின் உண்மை கண்டறியும் குழு.

கடந்த 20 ஆண்டுகளாக ஆலய வளாகத்துக்குள் நடந்து வந்த நாட்டியாஞ்சலி விழாவைத் தடை செய்தது முழுக்க முழுக்க திமுக அரசின் ஹிந்து மத விரோத போக்கே தவிர வேறொன்றுமில்லை என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!