கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் திறப்பு -பக்தர்கள் தரிசனம்

Jayankondam Temple-அரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 61 கோவில்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கவும் அங்கு மக்கள் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து அனைத்து வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசு 5ம் தேதி வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், திறக்கவும் பொது போக்குவரத்தை இயக்குவது என்பது உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவித்ததையடுத்து தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உலக பாரம்பரிய சின்னமாகவும் யுனெஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயமும் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி திறக்கப்பட்டது. கோவில் ஊழியர்கள் ஆலயத்தின் கதவுகளை திறந்து இறைவனை தரிசிக்க பக்தர்களை அனுமதித்தனர். சமூக இடைவெளியுடன் முககவசம் அனிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பூஜைபொருள்களை எடுத்து வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரசாதங்கள் தரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமழபாடி வைத்யநாதசுவாமி ஆலயம் அரியலூர் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கிராமத்தில் உள்ள பெருமாள் ஆலயம் உள்ளிட்ட 61 வழிபாட்டு தளங்களும் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டு சென்றனர். சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து வருவதை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu