/* */

பால் அட்டைக்கு சமூக இடைவெளி இல்லாமல் நின்ற பொதுமக்கள்

அரி/யலூரில் பால் அட்டையை பெற பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நின்றனர். மேலும் பால் அட்டையை புதுப்பிக்க கால அவகாசத்தை நீ்ட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரி்க்கையும் விடுத்தனர்.

HIGHLIGHTS

பால் அட்டைக்கு சமூக இடைவெளி இல்லாமல் நின்ற பொதுமக்கள்
X

அரியலூரில் காளியம்மன் கோவில் தெருவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் அரியலூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் காலை மற்றும் மாலையில் பால் உற்பத்தியாளர்களிடம்‌ இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பொது மக்களுக்கு வீடு வீடாகச் சென்று இரு வேளையிலும் பால் வினியோகம் செய்வது வழக்கம்.

மாதம் 10ஆம் தேதிக்குள் பால் அட்டை பெறும் பொது மக்களுக்கு மட்டுமே பால் வினியோகம் செய்யப்படும். தற்போது முழுபொதுமுடக்கம் என்பதால் சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் பால் அட்டை பெறுவதற்கு பால் பண்ணையில் உள்நின்று அட்டையை வாங்கி வந்தனர்.

பால் பண்ணையில் கூட்டமாக இருந்ததை பார்த்த அரியலூர் நகராட்சி உதவி ஆய்வாளர் முத்து முகமது பால் பண்ணையில் சென்று பொதுமக்களை சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததை பார்த்து இடைவெளியுடன் நீக்குமாறும் வெளியேறச் சொன்னார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் பால் அட்டையை பெற்றனர். மேலும் பொது முடக்கம் காலத்தில் அட்டை பெறும் நாளை நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 10 May 2021 1:00 PM GMT

Related News