/* */

பொங்கலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்த விளையாட்டு போட்டிகள்

அரியலூர் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன.

HIGHLIGHTS

பொங்கலை முன்னிட்டு விறுவிறுப்பாக நடந்த  விளையாட்டு போட்டிகள்
X

அரியலூர் மாவட்டம் உஞ்ஞினி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற தவளை ஓட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள்.

பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளாக காணும் பொங்கல் அன்று அனைத்து கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், கோலப்போட்டி, சோடா பாட்டில்களில் தண்ணீர் நிரப்புதல், இசை நாற்காலி என பல்வேறு போட்டிகளை, சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கு என நடத்துவர்.

ஆனால், காணும் பொங்கல் தினத்தன்று, கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், சில கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்றே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களிலும் இன்று விடுமுறை தினமாக இருந்ததால், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில் உஞ்ஞினி, சிறுகடம்பூர், பொன்பரப்பி, சேடகுடிக்காடு, அம்மாகுளம் உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று விளையாட்டுப் போட்டிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடத்தினர். நிறைவாக போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On: 18 Jan 2022 11:15 AM GMT

Related News