/* */

கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

ஜெயங்கொண்டம் போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
X

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகளிர் காவலர்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களால், ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியில், "கேடயம் (SHIELD)''* திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் 181 , 1098 ,100 ஆகிய அவசரகால தொலைபேசி எண்கள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . மேலும் கேடயம் (SHIELD) திட்டத்தின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Updated On: 21 July 2021 5:31 AM GMT

Related News