/* */

சுகாதார சீர்கேடு:கொரோனா நோயாளிகள் போராட்டம்

கொரோனா சிகிச்சை முகாமில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து நோயாளிகள் காலை உணவை சாப்பிடாமல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

HIGHLIGHTS

சுகாதார சீர்கேடு:கொரோனா நோயாளிகள் போராட்டம்
X

அரியலூர் நகரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை முகாம் செயல்பட்டு வருகின்றது. இங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஆண்கள் மற்றும் பெண்கள் என 52 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 10 கழிவறைகள் உள்ள நிலையில் அதில் மூன்று கழிவறைக்கு கதவு இல்லை எனவும் அக்கழிவறைகளை சுத்தம் செய்யாததால் கொரோனா நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே கொரோனா சிகிச்சை மையத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரிசெய்யக்கோரி இன்று காலை உணவை சாப்பிடாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்குவந்த அதிகாரிகள் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறியதையடுத்து கொரோனா நோயாளிகள் தங்களது காலை உணவை எடுத்துக்கொண்டனர்.

Updated On: 14 May 2021 9:48 AM GMT

Related News