/* */

செந்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

செந்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செந்துறை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

தளவாய் மற்றும் குழுமூர் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்கு உட்பட்ட தளவாய் மற்றும் குழுமூர் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமணன் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது::-

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கென தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. மேலும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் நுகர்வோர்களுக்கு சரியான விலையிலும், தரத்திலும் உணவுப்பொருட்கள் கிடைக்கும் வகையில் உழவர் சந்தைகள் மூலம் தற்பொழுது விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயப் பெருங்குடி மக்கள் அதிக அளவில் பயன் பெறும் வகையில் நெல் பயிரிடப்படும் இடங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் தற்பொழுது தூத்தூர், ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, காரைகுறிச்சி, கோடாலிகருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தற்சமயம் வரை 1738 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ள தளவாய் கூடலூர் மற்றும் குழுமூர் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தலா 500 டன் வீதம் 1000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் திறந்து வைக்கப்பட்டுள்ள. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விளைவித்த நெல்லிற்கு சரியான விலை கிடைத்திட முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து நேரடி கொள்முதல் நிலையங்களில் உள்ள எடை போடும் இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பாலமுருகன், செந்துரை வட்டாட்சியர் குமரையா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2021 9:00 AM GMT

Related News