/* */

அரியலூரில் மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அரியலூரியில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் மாணவிகளுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
X

அரியலூர் மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயலர் கமல்பாபுவிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை போலீசார் வழங்கினர்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், காவல் துறை சார்பில் சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் செயலர் கமல்பாபு தலைமை வகித்தார். சைபர் க்ரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் படிப்புக்கு தேவையானவற்றை மட்டுமே செல்லிடப்பேசியை பயன்படுத்த வேண்டும். அதில் இணைய விளையாட்டில் அடிமையாவதை தவிர்க்க வேண்டும்.

தவறான படங்களை பார்க்கக் கூடாது, பதிவுகளை மற்றவர்களுக்கு அனுப்பக் கூடாது. இணையதளத்தில் எவரேனும் தங்களை ஏமாற்றி பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் 155260 என்ற சைபர் க்ரைம் உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


Updated On: 24 Dec 2021 11:12 AM GMT

Related News