/* */

அரியலூரில் 50ஆயிரம் கடைகள் அடைப்பு

பொதுமுடக்கத்தால் அரியலூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

HIGHLIGHTS

அரியலூரில் 50ஆயிரம் கடைகள் அடைப்பு
X

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் அரியலூர் நகர வீதி.

அரியலூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் கடைகள் முழுஅடைக்கப்பட்டிருந்தன. பொதுமுடக்கத்தால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

2வது அலை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகஅரசு பிறப்பித்துள்ள தளர்வுகள் அற்ற ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை பிறப்பித்துள்ளது. அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 50ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.


2வது அலை கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏழு மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்கள் அற்ற ஞாயிற்றுக்கிழமை ஊரங்கை அறிவித்திருந்தது. இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள காய்கறிகடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளிகடைகள், நகைகடைகள் உள்ளிட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காய்கறி சந்தைகள் மூடப்பட்டுள்ளது. வீதிகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 250 போலீசார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 8லட்சம் பொதுமக்களும் முழுஊரடங்கிற்கு ஆதரவு அளித்து தங்களை வீடுகளிலேயே உள்ளனர்.






Updated On: 25 April 2021 8:38 AM GMT

Related News