/* */

அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 89 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் தொ்டர்மழையால் 89 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 89 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்
X

அரியலூர் மாவட்டத்தில் தொ்டர் மழையால் வீடுகள் சேதம்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்து வரும் தொ்டர்மழையால் 89 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கடந்த 3 தினங்களாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அரியலூர் பகுதியில் 19 வீடுகள், செந்துறை பகுதியில் 9 வீடுகளும், ஆண்டிமடம் பகுதியில் 6 வீடுகளும் என 34 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.

அரியலூர் பகுதியில் 13 குடிசை வீடுகள், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 2 குடிசை வீடுகளும், செந்துறை பகுதியில் 25 குடிசை வீடுகளும், ஆண்டிமடம் பகுதியில் 14 குடிசை வீடுகளும் என 54 குடிசை வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. ஜெயங்கொண்டம் பகுதியில் 1 குடிசை வீடு முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 89 வீடுகள், குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன.

Updated On: 11 Nov 2021 4:23 AM GMT

Related News