மதுரை அமலாக்க துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மதுரை அமலாக்க துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
மதுரை அமலாக்க துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என பலர் மீதான வழக்குகளை மத்திய அரசின் அமலாக்க துறையினர் நடத்தி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆக தமிழக அரசியலில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சமீபத்தில் மணல் குவாரிகளில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ௧௦ மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

மத்திய அரசு பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களின் மீது அமலாக்கத்துறை, சிபிஐ , வருமான வரித்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இப்படி அமலாக்க துறையுடன் தமிழகத்திற்கு பெரிய ஒரு பிரச்சனை இருந்து வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் அங்கித் திவாரி. மருத்துவர் ஒருவரிடம் அமலாக்க துறையில் நடந்து வரும் வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்காக இந்த லஞ்ச பணத்தை பெற்றதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மதுரையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது தமிழக போலீசாரும் மத்திய துணை ராணுவத்தினரும் ஏராளமானவர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அமலாக்க துறை அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story