வீடு கட்டப் போறீங்களா?.... முதல்ல மனையடி சாஸ்திரத்தை தெரிஞ்சுக்கங்க....

வீடு கட்டப் போறீங்களா?.... முதல்ல   மனையடி சாஸ்திரத்தை தெரிஞ்சுக்கங்க....
X
Sasthiram in Tamil - தமிழகத்தில் பாரம்பரியமாகவே வாஸ்து வருவதற்கு முன்பிருந்தே மனையடி சாஸ்திரம் காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த சாஸ்திரத்தின் படிதான் வீட்டின்அறைகளின் அளவுகள் அனைத்தும் கட்டப்படுகிறது.


Sasthiram in Tamil -கல்யாணம் பண்ணிப் பார் வீட்டை கட்டிப்பார் என்பது பெரியோர்களின் வாக்கு. அந்த வகையில் கல்யாணம் பண்ணுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும் பல பிராசஸ் உண்டு. இது பெரும் வேலை. அதற்குதான் அ ப்படி சொல்லியுள்ளனர்.

அதேபோல் வீடு கட்டுவது என்பது பல பிரச்னைகளை உள்ளடக்கியது. முதலில் மனை வாங்க வேண்டும். வாங்கும் மனை நல்ல இடத்தில் உள்ளதா என ஆராய வேண்டும். அக்கம் பக்கம் என்ன என்ன உள்ளது? எதிர்கால பிரச்னை என்ன என அலச வேண்டும். பின்னர் மண் எத்தகையது . நல்ல மண்ணா? அல்லது களிமண்ணா-? வீடு கட்டினால் செட் கிடைக்குமா? வாங்கும் மனையில் நீர் ஊற்று எப்படி இருக்கும்? தண்ணீர் ஃபோர் போட்டால் உடனே மேலாக கிடைக்குமா? இதுபோல் பலவற்றையும் பார்த்துதான் மனையே வாங்க வேண்டும்.

இதற்கு பிறகு தான் வீடு கட்டுவது என்பது? மனையின் அகலம் நீளத்திற்கு தகுந்தவாறு மனையடிசாஸ்திரத்தின் படி ரூம்களின் அளவுகள் உள்ளவாறு முதலில் ஸ்கெட்ச் போடவேண்டும். சரிங்க...மனையடி சாஸ்திரம்.. மனையடி சாஸ்திரம்னு சொல்றீங்களே... அது என்னாங்க? ன்னு கேட்கறீங்களா....

மனையடி சாஸ்திரம் என்பது நாம் வாங்கும்இடத்தில் கட்டப்படும் வீட்டின் நீளம் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும்? அறைகள் எந்தெந்த அளவுகளில் அமைத்தால் நமக்கு சிக்கல் வராது போன்ற விளக்கங்களை தெளிவுபடுத்துவதுதான் இந்த மனையடி சாஸ்திரம். இதனை நம் முன்னோர்கள் நமக்கு அளித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி அமைக்கும் பட்சத்தில் நாம் வாழும் வீடு எந்தவித பிரச்னைகள் வராமல் சுமூகமாக செல்லும்.

மனையடி சாஸ்திரம் என்பதுகுறைந்த பட்சம் 6 அடியில் இருந்து துவங்கி 100 அடி வரை உள்ளது. நமக்கு உள்ள இடத்தினை பொறுத்து இந்த அட்டவணையில் உள்ள நல்ல அளவுகளை பார்த்து நாம் வீடுகட்ட திட்டமிடல் வேண்டும். மனையடி சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு அளவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு அவற்றை விரிவாக காண்போம்.

மனையடி சாஸ்திர அளவுகள் வருமாறு....

6 அடி: நன்மை தரக்கூடியது, இறைவன் அருள் கிடைக்கும்

7 அடி: தரித்திரம், வறுமை, கடன், நோய் போன்றன அதிகம் துன்புறுத்தும்.

8 அடி: நல்ல பாக்கியம், செல்வம், தெய்வ அருள், இன்பம் அனைத்தும் கிடைக்கும்.

9 அடி: கஷ்டங்களும் தோல்விகளும் நிறைந்தது.

10 அடி: சிறந்த உணவு, பொன் பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும்.

11 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், செழிப்பு நிறைந்த வாழ்க்கை அமையும்.

12 அடி: புத்திரர் இழப்பு, வறுமை துர்மரணங்கள் நிறைந்தது.

13 அடி: நோய், துயரங்கள், தோல்விகள் நிறைந்தது.

14 அடி: பகை, கவலைகள் நிறைந்தது.

15 அடி: வறுமை, பணக்கஷ்டம், துன்பங்கள் நிறைந்தது.

16 அடி: மகிழ்ச்சி பொங்கும், செல்வம் செழிக்கும்.

17 அடி: தொடங்கும் காரியம் வெற்றிகிடைக்கும், எதிரி கூட நண்பன் ஆவான்.

18 அடி: திருடர்களால் பொருள் நஷ்டம், மன வேதனை, வீடு அழியக்கூடிய நிலைமை கூட ஏற்படும்.

19 அடி: எப்போதும் மன வேதனை, புத்திரர்களால் கவலை, வறுமை இருக்கும்.

20 அடி: தொழில் நல்ல வருமானம் கிடைக்கும், சொகுசான வாழ்க்கை அமையும்

21 அடி: தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும், எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்.

22 அடி: சுயகௌரவம் பெருகும், பழி பாவங்கள் விலகும்.

23 அடி: நிம்மதி அழியும், தடைகள் ஏற்படும், உறவினர்கள் கூட பகைவர் ஆவர்.

24 அடி: தொடங்கிய காரியம் பாதியிலே நிற்கும், சேமிப்பு கரைந்து காலியாகி விடும்.

25 அடி: இல்லறத்தில் பிரச்சனைகளும் கஷ்டங்களும் நிறைந்த வாழ்க்கை ஏற்படும்.

26 அடி: இன்பங்களும் செல்வங்களும் நிறைந்த நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

27 அடி: பெயர், புகழ், பதவி அனைத்தும் கிடைக்கும்.

28 அடி: தோல்விகள் விலகி வெற்றி கிடைக்கும், அனைவரும் நட்பு பாராட்டுவார்கள்.

29 அடி: விவசாயம் பண்ணை தொழில் உயர்ந்து வாழ்க்கை வளம் பெறும்.

30 அடி: அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும், பூர்வீக சொத்து கிடைக்கும், யோகம் உண்டாகும்.

31 அடி: பொன் பொருள் சேர்க்கை கிடைக்கும், நல்லவர்கள் நண்பர்களாக கிடைப்பார்கள்.

32 அடி: இதுவரை நீங்கள் இழந்தவை திரும்ப கிடைக்கும், எல்லோரையும் ஈர்த்து இழுக்கும் ஆற்றலும் கிடைக்கும்.

33 அடி: வருமானம் அதிகரிக்கும், செல்வாக்கும் பெருகும்.

34 அடி: இதுவரை சேர்த்து வைத்த பெயரும் புகழும் அழிந்து விடும், தீய பலன்களே நடக்கும்.

35 அடி: செல்வ செழிப்பும் செல்வாக்கும் உயரும்.

36 அடி: பதவி, புகழ் கிடைக்கும். வீரதீர செயல்களும் செய்வார்கள்.

37 அடி: விவசாயம் மற்றும் பண்ணை தொழில் அதிகரிக்கும், வெற்றியும் கிடைக்கும்.

38 அடி: எந்த காரியங்கள் தொடங்கினாலும் இடையூறுகளும் குழப்பங்களும் ஏற்படும்.

39 அடி: இன்பம், செல்வம், குடும்பத்தில் அமைதியான வாழ்க்கையும் அமையும்.

40 அடி: எந்த வேலை தொடங்கினாலும் இடைஞ்சலும் எதிர்ப்பும் அதிகரிக்கும்.

41 அடி: பொன் பொருள் அதிகரிக்கும், தொழிலும் சிறப்பாக நடைபெறும்.

42 அடி: வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைத்து மகிழ்ச்சியாக வாழலாம்.

43 அடி: அனைத்திலும் ஏமாற்றமும் தடைகளுமே கிடைக்கும்.

44 அடி: நோய்களும் துன்பங்களும் நிறைந்திருக்கும்.

45 அடி: புகழும் பொருளும் பெருகும்.

46 அடி: வறுமையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும்.

47 அடி: கடன் சுமையும் கவலையும் அதிகரிக்கும்.

48 அடி: விபத்து, வறுமை, பகைவர்களால் துன்பம் உண்டாகும்.

49 அடி: திருடர் பயம் மற்றும் அவமானம் ஏற்படும்.

50 அடி: தொடங்கும் காரியங்கள் அப்படியே இருக்கும், தொந்தரவுகளும் அதிகரிக்கும்.

51 அடி: துன்பங்களும் தொல்லைகளும் ஏற்படும்.

52 அடி: விவசாயத்தினால் இலாபமும் வெற்றியும் கிடைக்கும்.

53 அடி: பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும்.

54 அடி: அரசாங்கத்தினால் பிரச்சனைகள் ஏற்படும்.

55 அடி: சுற்றத்தாரிடம் பகைமை ஏற்படும்.

56 அடி: உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் நல்லதே நடக்கும்.

57 அடி: குடும்பத்தில் குழப்பமும் புத்திரர்களால் வேதனையும் ஏற்படும்.

58 அடி: துன்பங்கள், எதிர்பாராத செலவு இழப்பு போன்றவை ஏற்படும்.

59 அடி: கவலை குடி கொள்ளும், சேர்த்த பொருள்கள் தீய வழியில் அழிய



60 அடி: தொட்டதெல்லாம் வெற்றி பெறும் செல்வம் அதிகரிக்கும்.

61 அடி: மனதில் கவலை அதிகரிக்கும் வீண் பிரச்சனைகளும் வரும்.

62 அடி: வருத்தமும் வறுமையும் நிலைத்திருக்கும்.

63 அடி: பொன் பொருள் அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

64 அடி: அரசாங்கத்தால் உதவியும் புகழும் கிடைக்கும், மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

65 அடி: இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.

66 அடி: குழந்தைகளால் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நிம்மதியும் நிலைத்திருக்கும்.

67 அடி: தீய சக்திகளினால் தொந்தரவுகள் ஏற்படும்.

68 அடி: பொன்பொருள் சேரும் மற்றும் பெரியோர்களின் ஆதரவும் கிடைக்கும்.

69 அடி: அவமானங்கள் ஏற்படும் செல்வம் அழியும்.

70 அடி: மதிப்பும் மரியாதையும் உயரும்.

71 அடி: சமூகத்தில் அந்தஸ்த்து உயரும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.

72 அடி: பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும் ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும்.

73 அடி: தரித்திரம், பொன் பொருள் செலவு அதிகரிக்கும், வம்ச விருத்தியும் தடைப்படும்.

74 அடி: அரசு சலுகை, பரிசு, பதவிகள் தேடி வரும்.

75 அடி: புகழும் செல்வங்களும் வீழ்ச்சி அடைந்து துன்பங்கள் தொடர் கதையாக இருக்கும்.

76 அடி: கொடுமைகள் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும். நண்பர்களாலும் எதிரிகளாலும் தீமையே ஏற்படும்.

77 அடி: வண்டி வாகனங்கள் கிடைக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

78 அடி: பிள்ளைகளால் பிரச்சனை எதிர்காலத்தில் நிம்மதியின்மை போன்றவை ஏற்படும்.

79 அடி: கால்நடை வளர்ப்பில் வளர்ச்சி மற்றும் எல்லோராலும் பாராட்டப்படும் நிலையும் உண்டாகும்.

80 அடி: பொன் பொருள் சேரும் மற்றும் மகிழ்ச்சி கலந்த வாழ்க்கை அமையும்.

81 அடி: விபத்துக்கள் ஏற்படும் மற்றும் தலைமகனுக்கு ஆபத்துக்களும் ஏற்படும்.

82 அடி: இயற்கை சீற்றத்தினால் ஆபத்துக்கள் நேரிடும்.

83 அடி: வறுமை நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும்.

84 அடி: எதிர்பாராத உதவிகள் கிடைத்து நன்மைகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.

85 அடி: அரசாங்கத்தால் ஆதரவும் நன்மைகளும் கிடைக்கும்.

86 அடி: எப்போதும் துன்பங்களும் தொல்லைகளும் நிறைந்த வாழ்க்கையாகவே இருக்கும்.

87 அடி: பிரயாணங்களால் நன்மைகள் ஏற்படும்.

88 அடி: இறை அருளால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

89 அடி: விருந்து கலந்த முன்னேற்றமான வாழ்க்கை அமையும், நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

90 அடி: அன்பு, ஆதரவு, செல்வம் அனைத்தும் கலந்த வாழ்க்கை அமையும்.

91 அடி: கல்வியினால் நற்செயல்கள் உண்டாகும்.

92 அடி: பட்டங்களும் புகழும் தேடி வரும்.

93 அடி: அரசு மற்றும் அரசாங்கத்தால் பிரச்சனைகள் ஏற்படும்.

94 அடி: தரித்திரம் அமைதியற்ற வாழ்க்கை ஏற்படும்.

95 அடி: செல்வ வளம் அதிகரிக்கும் பெரியவர்களுடன் நட்பும் ஏற்படும்.

96 அடி: செல்வம் அழியும் திருடர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.

97 அடி: வியாபாரம் விருத்தி அடையும்

98 அடி: எல்லோராலும் நன்மைகளும் சென்ற இடத்தில் சிறப்புகளும் கிடைக்கும்.

99 அடி: கற்றோரால் நன்மைகளும் ராஜயோகமும் கிடைக்கும்.

100 அடி: தெய்வ அருள் கிடைக்கும் எல்லா செல்வங்களும் பரிபூரணமாக கிடைத்து நன்மை


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
நாமக்கல் அருகே முத்துக்காப்பட்டியில் 25-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா..!