63 நாயன்மார்கள் யார் என உங்களுக்கு தெரியுமா?
Worship of Shiva, 63 Nayanmars- சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் 63 நாயன்மார்கள் பற்றி அறிவோம். (கோப்பு படம்)
Worship of Shiva, 63 Nayanmars-- சிவ வழிபாட்டின் மூலம் புகழ் அடைந்தவர்கள்தான் நாயன்மார்கள். இவர்கள் 63 பேர் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர்.
சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மார்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7-ம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மார்களில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள்.
இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும், எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர் பெண்கள். கி.பி. மூன்று, நான்காம் ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர்.
தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்கரசியார் என்பவர் நாயன்மார்களில் மற்றொரு பெண்.
திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயன்மார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
63 நாயன்மார்கள் விவரம் வருமாறு
1.அதிபத்தர்
2.அப்பூதியடிகள்
3.அமர்நீதியார்
4.அரிவட்டாயர்
5.ஆனாயர்
6.இசைஞானியர்
7.இடங்கழியார்
8.இயற்பகையார்
9.இளையான்குடி மாறன்
10.உருத்திரபசுபதியார்
11.எறிபத்தர்
12.ஏயர்கோன்கலிக்காமர்
13.ஏனாதி நாதர்
14.ஐயடிகள் காடவர் கோன்
15.கணநாதர்
16.கணம் புல்லர்
17.கண்ணப்பர்
18.கலிக்கம்பர்
19.கலியர்
20.கழறிற்றறிவார்
21.கழட்சிங்கர்
22.காரியார்
23.குங்கிலியக்கலயர்
24.காரைக்கால்
25.குலச்சிறையார்
26.கூற்றுவார்
27.கோச்செங்கட்சோழர்
28.கோட்புலியார்
29.சடையனார்
30.சண்டேசுரர்
31.சத்தியார்
32.சாக்கியர்
33.சிறுப்புலியார்
34.சிறுத்தொண்டர்
35.சுந்தரர்
36.செருத்துணையார்
37.சோமாசிமாறர்
38.தண்டியடிகள்
39.திருக்குறிப்புத்தொண்டர்
40.திருஞானசம்பந்தர்
41.திருநாவுக்கரசர்
42.திருநாளைபோவார்
43.திருநீலகண்டர்
44.திருநீலகண்டயாழ்பாணர்
45.திருநீலநக்கர்
46.திருமூலர்
47.நமிநந்தியடிகள்
48.நரசிங்கமுனையாரையர்
49.நின்றசீர்நெடுமாறர்
50.நேசர்
51.புகழ்ச்சோழர்
52.புகழ்த்துனையார்
53.பூசலார்
54.பெருமிழவககுரும்பர்
55.மங்கயற்கரசியார்
56.மானக்கஞ்சாறர்
57.முருகர்
58.முனையடவார்
59.மூர்க்கர்
60.மூர்த்தியார்
61.மெய்ப்பொருளார்
62.வாயிலார்
63.விறண்மிண்டர்
இந்த 63 நாயன்மார்களின் கதைகளில், சிவனுக்காக அவர்கள் வெளிப்படுத்திய பக்தி, இன்றளவும் போற்றத்தக்கதாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu