ஆட்டம்... ஆரம்பம்.... வார்த்தைப்போர் ..... திமுக அமைச்சர்களுக்குள் மோதல் துறைரீதியிலான குற்றச்சாட்டுக்கு பதிலடி

திமுகவின் தேர்தல் சின்னம் உதயசூரியன் (கோப்பு படம்)
tamilnadu ministers clashed...cm action taken?
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும், நிதித்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜனுக்கும் வார்த்தைப்போர் துவங்கியுள்ளதால் இது எங்கு போய் முடியுமா? என நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியே இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்து படாத பாடுபட்டு மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் யோசனையோடு அனைத்த வழிமுறைகளும் நடந்து ஆட்சியையும் திமுக பிடித்தது.
tamilnadu ministers clashed...cm action taken?
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (கோப்பு படம்)
tamilnadu ministers clashed...cm action taken?
இருந்தாலும் உட்கட்சிப்பூசலை இன்று வரை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினால் தீர்த்து வைக்க முடியவில்லை. எல்லா மாவட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதால் திமுக தலைமைக்கு இது காலம் காலமாக ஒரு நிரந்தர தலைவலியாகவே இருந்து வருகிறது.முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தாலும் இவ்வளவாக இல்லை. இது லோக்சபா வரை நீடித்தால் மக்கள் மத்தியில் மதிப்பு இருக்குமா? என்பது சந்தேகமே. அதற்குள் கட்சித்தலைமை அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால்?
மதுரையில் நடந்த கூட்டுறவுத்துறை விழாவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் துறையாக கூட்டுறவுத்துறையை மாற்ற வேண்டும். இத்துறையின் செயல்பாட்டு திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும்.கூட்டுறவுத்துறையானது இன்று வரை கம்ப்யூட்டர் மயமாக முழுமையாக ஆக்கப்படவில்லை. இதனால் பலவிதமான தவறுகள் நடக்கின்றன. இத்துறையின் செயல்பாடுகளில் எனக்கு போதிய திருப்திஇல்லை என பேசினார்.
திமுகவின் மூத்த நிர்வாகியும் தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி குறித்து இதுபோல் நிதியமைச்சர் பேசியது பெரிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எதிர்க்கட்சித்தலைவர் போல் ஆளும் கட்சியின் நிதியமைச்சரே பேசியதால் பெரும் அதிர்ச்சியடைந்தனர் நிர்வாகிகள்.
முதன்முறையாக எம்எல்ஏவாகி அமைச்சருமான ஜூனியர் அமைச்சர் சீனியர் அமைச்சரை இதுபோல் பேசினால் அவர் சும்மா இருப்பாரா? அவர் ஒரு காட்டமான பதில் அறிக்கையினை அளித்துள்ளார். அவர் திண்டுக்கல்லில் அளித்த பேட்டியில்,தமிழகத்தினைப் கூட்டுறவுத்துறையைப் பொறுத்தவரை ஏழு கோடி மக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயலாற்றி வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் திருப்தி அடையும் வகையில் எங்களுடைய துறையின் செயல்பாடும், பணிகளும்இருக்கும்.
tamilnadu ministers clashed...cm action taken?
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி (கோப்பு படம்)
tamilnadu ministers clashed...cm action taken?
யாராவது இத்துறையில் தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை உடனே எடுக்கப்படும். இத்துறையானது வெளிப்படைத்தன்மையான செயல்பாட்டில் களம் இறங்கி உள்ளது.முதல்வரைத் திருப்திப் படுத்தும் வகையில் எங்கள் வேலை இருக்கும்.மற்றவர்கள் யாரையும் நாங்கள் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
மேலும் நான் 50 ஆண்டு கால அரசியலில் இருந்து வருகிறேன். மக்களுக்கு இந்த அரசின் திட்டத்தினை சேர்க்க வேண்டியது எங்களுடைய முழுப் பொறுப்பு. நாங்கள் அனைவருமே வேலைக்காரர்கள். குறைகளை மக்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை உடனே நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
tamilnadu ministers clashed...cm action taken?
இதுகுறித்து ரேஷன் கடை பற்றி தெரியாதவர்கள் திருப்தி அடைய வேண்டிய அவசியமில்லை. நாங்கள் நிதி கேட்கவில்லை.சுயலாபத்திற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. 10 ஆயிரம் பேருக்கு ஒரு பைசா இல்லாமல் வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளோம்.
மேலும் அதிமுக கோட்டையான திண்டுக்கல்லினை திமுக கோட்டையாக மாற்றிக் காட்டியுள்ளோம் என பேட்டியி்லி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.முக்கியத்துறைகளின் அமைச்சர்கள் இருவருக்குள் இதுபோல் மோதல் ஏற்பட்டுள்ளது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியினை ஏற்படுத்துவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu