நீங்க தான் நாளைய எதிர்காலம் என விஜய் அன்று பேசிய பேச்சு...இளைஞர்களைக் கவருமா?....
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைக் கவுரவித்த விஜய் மாணவனின் பெற்றோர்களுடன் (கோப்பு படம்)
Actor Vijay Political Entry
தமிழகத்தில் மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புது வரவு நேற்று நடந்தேறியது. ஆமாங்க...நடிகர் விஜய் தன் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார்.இக்கட்சியைப் பதிவு செய்ய டில்லியில் அவரது நிர்வாகிகள் ஆக்கபூர்வ வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கட்சியின் பெயர் பதிவிடப்பட்டவுடன் இதற்கான கொள்கைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். இது மக்களை மையமாக வைத்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Actor Vijay Political Entry
சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கும் விஜய் (கோப்பு படம்)
ரீவைண்ட் தமிழ்நாடு
தமிழகத்தின் அரசியலில் இதுவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சியை நடத்தி வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஆக பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சிக்கட்டிலில் இருந்தது. அதற்கு முன்னர் ஒரு சில காலம் வரையி்லும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் மாற்றத்தினை எதிர்பார்த்து மாறி மாறி வாக்களித்தனர்.
Actor Vijay Political Entry
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் இரு பெரும் ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இரு பெரும் கட்சிகளும் சந்தித்தன. இதில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் அதாவது 10 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்தது. கொள்கை ரீதியாக இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள்இருந்தாலும் திமுகதான் வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளைக் கடந்து ஆட்சி செய்து வருகிறார்.
தற்போதைய ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி வரும் லோக்சபா 2024 ன் முடிவில்தான் தெரிய வரும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ் இபிஎஸ் என இரு பிரிவுகளாக களம் இறங்குவதால் இவர்களுக்கு வாக்கு வங்கி என்ன ஆகும்? என்பதை தேர்தல் முடிவுகள்தான் சொல்லும். சரி விஜய்யின் விஷயத்துக்கு வருவோம்.
Actor Vijay Political Entry
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுவிழா நடத்திய கூட்டத்தில் பேசும் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய். (கோப்பு படம்)
நடிகர்விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றத்தின் பெயரை விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்தார். அப்போதிருந்து மக்களுக்கு தேவையான பல அடிப்படை வசதிகள் நலத்திட்ட உதவிகள் என மக்கள் சார்ந்த இயக்கமாக நடத்தி வருகிறார். கடந்த ஆண்டின் பொதுத்தேர்வுகளில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை சென்னைக்கு நேரில் தனது சொந்த செலவில் அழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தமிழக வரலாற்றில் இன்று எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும் இதைப்போல் யாருமே செய்யாததை அன்றே விஜய் செய்து காட்டியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது எந்தவொரு அரசும் கல்விக்கு முதலிடத்தினை அளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளதாக அப்போதே செய்திகள் வெளியானது.
இதுமட்டும் அல்லாது சென்னை, நெல்லை போன்ற தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த போது அங்கு நேரிடையாக சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார் விஜய்.
கல்வி உதவித்தொகை வழங்கி பாராட்டி பேசும்போது நீங்க தான் எதிர்காலம் என பேசி இளையதலைமுறையினருக்கு வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு ஓட்டுக்கு துட்டு வாங்காதீங்க என அப்போதே தெரிவித்தார்.. இதனால் அவருடைய நோக்கம் இளைய தலைமுறையினரின் வாக்குகளைக் கவர்ந்து வெற்றிக்கு வித்திடுவது... கண்டிப்பாக பல இளையதலைமுறையினர் தமிழகத்தில் நடந்த பல தேர்தல்களில் யாருக்கும் ஓட்டு போட விருப்பமின்றி போடாமல் விட்டதாகவும், பலர் நோட்டாவுக்கு போட்டதாகவும் அப்போதே செய்கிதள் வெளி வந்தன. நடிகர் விஜயகாந்த் திடீரென மறைந்ததால் அந்த இடத்தினை நடிகர் விஜய் நிரப்புவார் என்ற எண்ணம் தமிழக இளைய வாக்காளர்களிடம் மிகுந்துள்ளதால் நடிகர் விஜய்க்கு பெருத்த ஆதரவு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
Actor Vijay Political Entry
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளிடம் கலந்துரையாடும் தவெக தலைவர் விஜய் (கோப்பு படம்)
கடந்த 50 ஆண்டுகளாக தமிழக மக்கள் திராவிட ஆட்சியினைத் தவிர எந்தவொரு மாற்றத்தினையும் கண்டிராத போது விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் அவர் செய்வாரா? என்ற கேள்வி அனைத்து வாக்காளர்களின் மத்தியிலும் எழுந்துள்ளது.
அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவே நடிகர் விஜய் தன்னுடைய புதிய கட்சியைத் துவங்கியதோடு வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள லோக் சபா தேர்தலில் எந்த வொரு கட்சிக்கும் எங்களுடைய தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு தராது என்றும், 2024 தேர்தலில் யாரும் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் டார்கெட் எது தெரியுமா? 2026 தமிழக சட்டசபை தேர்தல்தான். இந்த இரண்டு ஆண்டுகளில் மக்களை நேரிடையாக சந்திக்க புறப்பட உள்ளார். இரு ஆண்டுகள் அனைத்து மக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி 2026 ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்ககொள்ளப்போகிறார் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை. நடிகர் விஜய் தனிக்கட்சி துவங்கியது பற்றி மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் வெளிப்படையாக பல கருத்துகளை தெரிவித்தாலும் உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் ஒரு அச்சம் நிலவி வருவதாகவே தெரிய வருகிறது. அந்த அச்சம் உண்மையாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே?....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu