3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: கலகலத்து போனது இந்தியா கூட்டணி

3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: கலகலத்து போனது இந்தியா கூட்டணி
3 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக இந்தியா கூட்டணி தலைவர்கள் கலகலத்து போய் உள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற நிலையில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் என்பது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு உலக கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டி போன்றது. அரை இறுதி போட்டியில் வென்றால் தான் பாரதீய ஜனதா நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியானது ௩ மாநிலங்களில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. ஒரு மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சியும், இன்னொரு மாநிலத்தில் அம்மாநில கட்சியும் பெற்றி பெற்றுள்ளன.

இந்த தேர்தல் முடிவானது பாரதிய ஜனதாவிற்கு இறுதி போட்டியில் அதாவது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தலைவர்களிடம் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணியை புறக்கணித்து காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டது தான் என அதிருப்தியில் உள்ளனர். இதனால் நாளை (டிச.6) காங்கிரஸ் அழைத்துள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல், அவர்களின் கட்சி பிரதிநிதிகளை அனுப்புவதாக அறிவித்து உள்ளனர். இதனால் கூட்டத்தை ஒத்திவைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் அடுத்த கூட்டம் நாளை (டிச.,6) புதுடில்லியில் நடத்தப்படும் என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்து இருந்தார். அதேநேரத்தில் 3 மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு காங்கிரசின் பேராசையே காரணம் என்றும், இந்தியா கூட்டணிகளுடன் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிட்ட காங்கிரசுக்கு எதிராகவும் கூட்டணி கட்சிகளே குற்றச்சாட்டை முன்வைத்தன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அழைத்துள்ள ஆலோசனை கூட்டத்திற்கு முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் பின்வாங்கியுள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, இக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என நேற்றே அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிவ் ரஞ்சன் மற்றும் சஞ்சய் ஜா ஆகியோரை அனுப்ப உள்ளதாகவும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சியின் எம்.பி., ராம்கோபால் யாதவை அனுப்புவதாகவும் தகவல் வெளியானது.

அதேபோல், சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவரும் தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலினும், இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இப்படி, முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் பின்வாங்கியதால், நாளை நடைபெற இருந்த ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகளை புறக்கணித்ததால் காங்கிரஸ் மீது இக்கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களிடையே கலகலப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story