ஜான்சி ராணி படைப் பிரிவின் தலைமை லட்சுமி சாகல் நினைவு நாள்
ஜான்சி ராணி படைப் பிரிவின் தலைமை லட்சுமி சாகல்
Lakshmi Sahgal in Tamil-இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கணையும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய உதவியாளருமாக இருந்தவர் லட்சுமி சாகல். மருத்துவரான லட்சுமி சாகல் 1943 ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்.
20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர். 1971 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்) கட்சியில் சேர்ந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார்.
1998 ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது இவருக்குக் கிடைத்தது. 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
திடீர் உடல் நலக் குறைவால் ஜூலை 19 இல் கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இதே ஜூலை 23 (2012) காலை 11:20 மணிக்கு மாரடைப்பினால் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu