நம்பிக் ( கை) வைத்தால் தான் தொட்டது துலஙகும்....படிங்க.....

Thannambikkai Kavithai
X

Thannambikkai Kavithai

Thannambikkai Kavithai-நம்பிக்கைதாங்க வாழ்க்கை. வாழ்க்கையில் நம்பிக்கையில்லாவிட்டால் அவ்வளவுதாங்க..

Thannambikkai Kavithai

வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். அதில் வெற்றிகளும் , தோல்விகளும் சகஜமானதே. எதையும் சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அன்றைய செயல்பாடுகளை கவனிக்கிறவர்கள் மட்டுந்தான் வாழ்க்கையில் ஜெயித்துக்கொண்டிருக்கின்றனர்.எப்படி வாகனங்களுக்கு டீசலும், பெட்ரோலும் எரிபொருளாக பயன்படுகிறதோ அதுபோல் மனித இனத்துக்கே நம்பிக்கையும், தன்னம்பிக்கையும்தான் அவர்களை நடக்க வைக்கிறது , ஓட வைக்கிறது, வாழ வைக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. உங்களிடம் உங்கள்மேல் நம்பிக்கை முதலில் வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கையானது மற்ற பிரச்னைகளை தகர்த்தெறிய பயன்படும்.

உங்களுக்கு தெரியுமா? மனிதர்கள் அனைவரையும் இறைவன் ஒரு சேரத்தான் படைக்கிறான். ஆனால் பிறப்பால் நாம் ஒன்றுபட்டாலும் வளர்ப்பால்,வளரும் சூழ்நிலையால் நாம் வேறுபட்டுவிடுகிறோம். இந்த வளர்ப்பும், சூழ்நிலையும்தான் ஒருமனிதனை உருவாக்கி சமூகத்திடம் ஒப்படைக்கிறது. பின்னர் அவர்கள் விஷயம் அறிந்து பல அனுபவங்களைக் கற்றுணர்ந்த பின்னர் தனியே தொழில் செய்யவோ, அல்லது வேலைக்கு செல்லவோ எத்தனிக்கின்றனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது பள்ளிப்பருவம் முதல் கல்லுாரிப்பருவம் வரை , அல்லது வேலைக்கு முயற்சி செய்து வேலை பெறும் வரை தன்னம்பிக்கை அவரவர்களிடத்தில் அதிகம் காணப்பட்டால்தான் அனைத்து வேலைகளுமே சக்ஸஸ் ஆக சான்ஸ் உண்டு. அதனை விடுத்து இடையில் ஏதாவது ஒரு தோல்வியைக் கண்டவுடன் அப்செட்டாகி உட்கார்ந்துவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது கதை என்று விட்டுவிட வேண்டியதுதான்....

தன்னம்பிக்கை கவிதை வரிகள்

மனிதர்களின் வாழ்க்கையை முடிக்க ஒரு நிமிடம் போதும்

ஆனால் துணிந்தால் அந்த வாழ்க்கையையே மாற்றிவிடலாம்

முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றுமில்லை

துணிந்தவனுக்கு வெற்றி என்பது எட்டாக்கனி அல்ல...

வாழ்க்கையில் நொடிந்து போவது, சோதனைகள் வரலாம்

ஆனால் விழுந்தவுடன் எழுந்திருக்க வேண்டும்..

. வீழ்ந்து கிடக்க கூடாது... விழுப்புண்ணாகிவிடும்..

கடலின் அலைகளிடம் விடாமுயற்சியை கற்றுக்கொள்

காலை உதிக்கும் சூரியனிடம் கடமை தவறாமை

வேகம்.. வேகம்... காட்டாற்றிட்ம் கற்றுக்கொள்

தேனீக்களிடம் சுறுசுறுப்பினை கற்றுக்கொள்

உழைப்பது எப்படி எறும்புகளிடம் கற்றுக்கொள்

வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்... இப்போது?

வாழ்ந்தாலும் ஏசும்...தாழ்ந்தாலும் ஏசும்....

வித்தியாசமான உலகமடா இது...உஷார்...

வெற்றி பெறும் வரை வீண்முயற்சி என்பார்கள்...

வெற்றிக்கு பின்னர் விடாமுயற்சியாக்கிவிடுவர்...

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்...

அவரவர்களின் வாழ்க்கை அவரவர்கள் கையில்...

கஷ்டங்கள், சோதனைகள், வறுமை, நஷ்டம்

என்பவை தற்காலிகமானவைகளே...

வெற்றி, மகிழ்ச்சி, விடாமுயற்சி...உள்ளிட்டவைகளே

நிரந்தரமான முயற்சி...

எதை தொடங்கினாலும் நம்பிக்(கை) வை... முன்னேற்றம் கிட்டும்..தன்னம்பிக்கைதான் வெற்றியைத் தரும்....

வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் தற்காலிகமானதே...

இன்பமும் துன்பமும் மாறி வருவதே வாழ்க்கை...

தொடர்ச்சியான துன்பங்கள் வராது....வராது...

தொடர்ச்சியான இன்பங்களும் கிடைக்காது.....

மாறி, மாறி வருவதுதான் வாழ்க்கை....இது யதார்த்தம்...

எவ்வளவுதான் கஷ்டங்கள் இருந்தாலும்

வீட்டிலுள்ள குழந்தைகளின் முகத்தினை

பார்த்தால் காணாமல் ஓடும் துக்கங்கள்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமல்ல.

..குழந்தைச்செல்வமே ...குழந்தைச் செல்வமே...

கைரேகை, ஜோசியம், இவைகள் எல்லாம் வழிகாட்டிகள்தான் நமக்கு எப்போதும் தரம் நிரந்தரமாக இருப்பது உழைப்பே...

உண்மையாக உழைப்பவர்கள் எப்போதும் நேரத்தினை

பார்ப்பதில்லை....உல்டாவாக உழைப்பவர்களே நேரத்தினை

கவனிக்கின்றனர்... எப்போது முடியும் வேலை என்று?

அவரவர் வாழ்க்கையில் ஆ யிரம் அர்த்தங்கள்... என்பது போல்

உங்கள் வாழ்க்கையின் வெற்றியும்.... தோல்வியும்...உங்கள் கைகளில்...

வாழ்க்கைன்னா வளர்ச்சி இருக்கணும்ங்க... கிணற்றிலிட்ட கல் போல்

ஒரே மாதிரி சென்றால் அது வாழ்க்கை இல்லீங்க...

முயற்சி செய்யுங்க... முன்னேற்றம் கிட்டும்... முயற்சிக்காதவரை

முன்னேற்றமும் இல்லைங்க...இதுதாங்க வாழ்க்கை...

வாழ்க்கைல் தோல்விகள் என்பது தவிர்க்க இயலாதவை

எல்லா செயல்களும் எப்போதும் வெற்றியை தராது...

நாணயத்தின்இரு பக்கங்கள் போல் வெற்றியும் தோல்வியும்

மாறி மாறி வருவதுதாங்க வாழ்க்கை... சகிப்புத்தன்மை தேவைங்க...

.ஓடுங்கள்.. ஓடுங்கள்... முன்னேற்றத்தினை நோக்கி...ஓடுங்க...

நில்லுங்க...நில்லுங்க... எதிர்ப்பதாக இருந்தால் மட்டும் நில்லுங்க...

உன்னை நீ நம்பு... உன்னை நீ நம்பு... உன்னை நீ நம்பு...

முதல்ல நீங்க உங்களை நம்பினால் தாங்க ... மற்றது எல்லாமே...

தன்னம்பிக்கை இருப்பவரிடம் தலைக்கணம் இருக்காது..

தலைக்கனம் உள்ளவரிடம் தன்னம்பிக்கை நிலைக்காது...

வாழ்க்கையில நீ அனைத்தையும் இழந்தால் கூட

தன்னம்பிக்கையினை இழக்காமல் இரு... முன்னேற்றம் உண்டு...

உனக்கு உதவிக்கு யாரும் இல்லை என நினைத்து விடாதே...

எப்போதும் உன்னுடன்இருக்கும் தன்னம்பிக்கைதான் துணை...

வாழ்க்கையில் நீ வெற்றியை பெற வேண்டுமானால்

நம்பிக்கையினை மட்டும் எப்போதும் தகர்த்துவிடாதே...

வெற்றி ...உன்னை விட்டுவிலகிடும்... தன்னம்பிக்கையும் தேவை....

வெந்ததைத் தின்று வாழ்ந்து முடிப்பதல்லங்க வாழ்க்கை...

சோதனைகளைச் சாதனைகளாக்குவதுதான் வாழ்க்கை...

காலங்களும் , நேரங்களும் யாருக்காகவும் காத்திருக்காது..

உரிய நேரத்தில் உரிய வேலைகளை செய்ய பழகிவிடு...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!