சொல்புத்தி இருக்கணும்... அல்லது சொந்த புத்தியாவது இருக்கணுங்க...படிங்க...

சொல்புத்தி இருக்கணும்... அல்லது  சொந்த புத்தியாவது இருக்கணுங்க...படிங்க...
X
ponmozhigal in tamil வாழ்க்கை என்பது பள்ளம் மேடு போன்றது . அதாவது இன்பமும் துன்பமும் மாறி வருவதுதான் வாழ்க்கை. சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொள்வது அவசியம்.

ponmozhigal in tamil

பறவைகள்பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று ஒரு சினிமா பாடலே உண்டு. அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அதுபோல் மனிதர்களில் எல்லோரும் பிறப்பால் ஒன்றுபட்டாலும் வளர்ப்பால் வேறுபடுகிறோம்.

நாம் வாழும் சுற்றுப்புறச்சூழல்தான் நம்மை பாதுகாக்கிறது. அந்த சுற்றுப்புறத்தினைச் சேர்ந்த பழக்க வழக்கங்கள் தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது வாழ்க்கையில்.

அந்த வகையில் மனிதர்களில் பல வகை உண்டு. ஒன்று அவர்களாகவே திட்டமிட்டு வாழ்க்கையில் எந்த பிரச்னைகளும்இல்லாமல் ஓட்டிவிடுவர். அடுத்ததாக ஒரு சிலர் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தான் செய்வதே சரி என்று தன்னிச்சையான முடிவுகளை மட்டும் எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்போர் இரண்டாவது ரகம்.

நமக்கு வழி தெரியவில்லை தெரிந்தவர்களிடம் கேட்டு பார்ப்போம் என அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு வாழ்க்கைச் சக்கரத்தினை பிரச்னையில்லாமல் கொண்டு செல்வோர் மூன்றாவது ரகம். இதுபோல் ஒவ்வொரு ரகமாக சொல்லிக்கொண்டு போகலாம். நாம் இப்போது பார்க்கப்போவது இரண்டாவது ரகம். அதாவது மற்றவர்களின் பேச்சை கேட்காமல் தான்தோன்றித்தனமாக இருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா அதுபோன்ற குணம் உடையவர்களுக்கு இந்த பொன்மொழிகள் தான் வழிகாட்டியாக இருக்கவேண்டும். ஆமாங்க...

நம் குடும்பத்தினைச் சார்ந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் யார் பேச்சையும் கேட்காதவர்களுக்கு சொன்னது யார் என்று தெரியாமல் நான்கு நல்லவிஷயங்கள் இரண்டு வரிகளில் சொல்கிறார்கள் என்றால் அதனைப்படித்துபார்த்தாவது இதுபோன்ற ஜென்மங்கள் இனியாவது திருந்தவேண்டும் .. என்ற நோக்கில்தான் நாம்சொல்கிறோம். சரிங்க...சுவாமிவிவேகானந்தர், புத்தர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்ஆகியோரின் பொன்மொழிகள் பற்றி பார்ப்போம்.

ponmozhigal in tamil


கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தரின் நினைவு இல்லம் அமைந்துள்ள பாறை (பைல்படம்)

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

ponmozhigal in tamil

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்பூவை போல் மென்மையானதுதோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானதுஇதயம் சொல்வதை செய்வெற்றியோதோல்வியோஅதை

தாங்கும் சக்திஅதற்கு மட்டும் தான் உண்டு

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

ponmozhigal in tamil


ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம் (பைல்படம்)

ponmozhigal in tamil

அப்துல்கலாம் பொன்மொழிகள்

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல. உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.

ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்.

பயந்தால் வரலாறு படைக்க முடியாது.

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.

சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது!

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம்.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

ஒருமுறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் இலட்சியம்!

கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது.

ponmozhigal in tamil


கயாவில் அமைந்துள்ள மிகப் பெரிய புத்தர்சிலை (பைல்படம்)

ponmozhigal in tamil

புத்தர் பொன்மொழிகள்

அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.

வாழ்க்கையின் நோக்கம்பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.விட்டு கொடுங்கள்.இல்லை விட்டு விடுங்கள்.

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு.அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.

உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

இந்த உலகில் எப்போதும்நிலைத்திருக்கும் சக்திஉண்மைக்கு தான் உண்டு.

தீமையை நன்மையால் வெல்லுங்கள்.பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்

ஆகாயத்திற்குச் சென்றாலும்,நடுக் கடலுக்குச் சென்றாலும்,மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும்,

எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும்,தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும்என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால்,

அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்.உங்களை யாராலும் தடுக்க முடியாது.ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லைஎன்பதை உணர ஆரம்பித்து விட்டால்.நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும்திருப்தியுடன் செய்யுங்கள்.அதுவே உங்கள் வாழ்வைஅர்த்தம் உள்ளதாக மாற்றும்.

இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள்.நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான்

வாழ்க்கையை இனிமையாக மாற்றும்.

உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்சரியான உதவிகளை செய்பவன் தான்.அந்த நட்பை விட்டு விடக் கூடாது.

ஒரு முட்டாள் நண்பனுடன் சேர்ந்து வாழ்வதை விடநீ தனியாக வாழ்வதே சிறந்தது.

அதிகமாக பேசுவதால் மட்டும்ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான்.

அமைதியாய் இருப்பவன்முட்டாள் என்று எண்ணிவிடாதேபேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.

மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்.

ஒன்றும் தெரியாது என்றுநினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.ஆனால், எல்லாம் தெரியும் என்றுநினைப்பவன் முழு மூடன்.

ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான்.ஒருவன் என்னை அடித்தான்.என்று அடுத்தவனைப்பற்றியேஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால்அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது.

செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும்.செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில்நிலைத்திருப்பது கிடையாது.'

போரில் ஆயிரம் பேரை வெல்வதைகாட்டிலும் சிறந்ததுஉன் மனதை நீ வெற்றி கொள்வது

நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும்துன்பம் தருவதாக இருக்கக்கூடாதுபிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

நமது உதடுகளை அரண்மனை வாயிற்கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும்.நமது வாயிலிருந்து வெளிப்படும்ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும்இதமாகவும் இருக்க வேண்டும்.

நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்உன் நிழல் போல உன்னை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும்.

அது நல்லதா இருந்தாலும் சரிகெட்டதாக இருந்தாலும் சரி.

வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும்இருக்கத் தான் செய்யும்.

அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

Tags

Next Story