Health Benefits of Pineapple- அன்னாசிப்பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்; இனிமேல் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!

Health Benefits of Pineapple- அன்னாசிப்பழம் தரும் ஆரோக்கிய நன்மைகள்; இனிமேல் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!
X

Health Benefits of Pineapple- அன்னாசி பழத்தின் நன்மைகள் (கோப்பு படம்)

Health Benefits of Pineapple- அன்னாசிப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதை தொடர்ந்து சாப்பிட்டால் பலவிதங்களில் நமக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

Health Benefits of Pineapple- அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.

* அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.

* இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

* அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும்.

* பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

* மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.


* இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். விட்டமின் ஏ.பி.சி. சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

அன்னாச்சி இலைசாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

* அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளறு ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.

* மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

* அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

* புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.

* தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.


* இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது.

* நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் வற்றல்களாக செய்து வைத்து தினமும் இரவில் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

மேலும் மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும். தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருப்பவர்கள், ஒரு சங்கு அளவுக்கு அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் பொருள் உள்ளது. இது உங்கள் மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும்போது ஏற்படும் வலியினை கட்டுப்படுத்த உதவுகின்றது. மேலும் இந்த ப்ரோமெலைன் நெறைய ஆரோக்கிய சிறப்புகளை கொண்டது.

* அன்னாசி பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற உதவுகின்றது. எனவே உங்கள் காயங்களை விரைவில் ஆற்ற அன்னாசி பலத்தினை உட்கொண்டு வரவும்.

* அன்னாசி பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. கால்சியம் நிறைந்த உணவுகளை இருந்து கால்சியம் சத்தினை உரிய மெக்னீசியம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.அன்னாசி பழத்தில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்துள்ளது.


* இன்றைய நவீன உலகில் பலபேர் உயர் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.

* அன்னாசி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து பிறகு பயன்படுத்த வேண்டும். இந்த உப்பு தண்ணீரில் பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் ப்ரோமைலின் தன்மையை செயலிழக்கச்செய்கிறது. ஆகவே சிறிதளவு உப்பில் பழம் சேர்ப்பதால் பழத்தின் இனிப்பு தன்மையை அதிகரித்து ருசியை அதிகரிக்கிறது.

* அன்னாசி பழத்தை வெட்டி எடுத்து உப்பு தண்ணீரில் கலந்து எடுத்த பிறகு பயன்படுத்த வேண்டும். இப்படி உப்பு கலந்த தண்ணீரில் கலந்து சாப்பிடுவதால் எரிச்சல் மற்றும் அரிச்சலை ஏற்படுத்தாது. உப்பு தண்ணீரில் கலந்து எடுத்து சாப்பிடுவதால் உடம்பில் அலர்ஜி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கூட பயனுள்ளதாக இருக்கிறது.

Tags

Next Story
பாஸ்ட் ஃபுட்க்கு செய்ற செலவ  இந்த நட்ஸ் &  ட்ரை ஃப்ரூட்ஸ்க்கு செய்ங்க..! அப்றம் உங்க உடம்புல என்ன ஆகுதுனு பாருங்க..! | Dry fruits and Nuts benefits in tamil