Health Benefits of Jaggery- வெல்லத்தை இனிமேல் சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. ஒரு துண்டு வெல்லத்துக்குள் அவ்ளோ விஷயம் இருக்கு !

Health Benefits of Jaggery- வெல்லத்தை இனிமேல் சாதாரணமா நெனைச்சுடாதீங்க.. ஒரு துண்டு வெல்லத்துக்குள் அவ்ளோ விஷயம் இருக்கு !

Health Benefits of Jaggery- வெல்லம் தரும் நன்மைகள் குறித்து அறிவோம்! 

Health Benefits of Jaggery- வெள்ளை சர்க்கரை எனப்படும் அஸ்கா சர்க்கரை பயன்பாடு வந்தபின் கரும்பு சர்க்கரை பயன்பாடு குறைந்து போய்விட்டது. வெல்லம் என்பது பயன்பாடே இல்லாமல் போய்விட்டது. ஆனால் வெல்லத்தில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.

Health Benefits of Jaggery- ஒரு துண்டு வெல்லத்துக்குள் இவ்ளோ நன்மை ஒளிஞ்சிருக்கிறதா என்றுதால் வெல்லம் பற்றிய தகவல்களை கேட்கும்போது நமக்கு தோன்றுகிறது. பொதுவாக நமக்கு ஆரோக்கியம் தரும் வெல்லம் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் இதில் பார்க்கலாம்.

1.பெண்களின் ஆரோக்கியத்திற்கு வெல்லம் பெருமளவில் உதவுகிறது.

2.வெல்லம் பெண்களின் பல பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது.

3.ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கிறது.

4.பெரும்பாலும் பெண்களுக்கு வரும் ரத்த சோகை பிரச்சனை வெல்லம் சாப்பிடுவதனால் தீரும்.

5.ஏனெனில் இதில் கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் வைட்டமின் பி12 பொட்டாசியம் போன்ற ஆரோக்கியம் தரும் சத்துக்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது.

6.வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை கலந்து குடிக்கும் போது மாதவிடாய் காலங்களில் வரும் பலவீனத்திலிருந்து நாம் விடு பட முடியும்.

7.மேலும் முகப்பரு மற்றும் சரும பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கவும்,மற்றும் ஹார்மோன் சமநிலை படுத்தவும் வெல்லம் பெருமளவில் உதவுகிறது.

8.பெண்களுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுப்பதால் இது பெண்களின் தோழியாக கருதப்படுகிறது


வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்… இதில் இவ்ளோ நன்மை இருக்கு!

பலரும் தங்கள் உடல் எடையை குறைப்பது பற்றி பேசுகிறார்கள். வெல்லத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து குடியுங்கள் எவ்வளவு நன்மை இருக்கு பாருங்கள்.

இப்போதெல்லாம் பலரும் தங்கள் உடல் எடையைக் குறைப்பது பற்றி பேசுகிறார்கள். உடல் எடையைக் குறைப்பது என்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் இப்போது தங்கள் ஆரோக்கியமான நல்வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். ஆரோக்கியமான, சத்தான உணவை உட்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

ஆனாலும், ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் முக்கியம். உடல் எடையைக் குறைப்பதற்கு இங்கே சில குறிப்புகளைத் தருகிறோம். உடல் எடையைக் குறைக்க ஆரோக்கிய பாணங்கள் உதவியாக இருக்கும். இது நச்சுகளை அகற்றி உடலை சுத்தப்படுத்தவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆரோக்கிய பானங்களை சமையலறை பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.


வெல்லம் மற்றும் எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகள்:

எலுமிச்சை சாறு அதன் எடையைக் குறைப்பதற்காக அறியப்படுகிறது. அதில் வெல்லம் சேர்ப்பதன் மூலம், இரண்டு பொருட்களின் நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

எலுமிச்சை வைட்டமின் சி உட்கொள்வதற்கான ஒரு வளமான ஆதாரமாகும். இது நீரேற்றம், சருமத்தின் தரம், செரிமானம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகிறது. இவை அனைத்தும் உடல் எடை குறைப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பு ஆகியவற்றை செய்கிறது.

மறுபுறம், வெல்லம், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது, உடலை சுத்தப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனுடன், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே, வெல்லம் மற்றும் எலுமிச்சை நீரின் கலவையானது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

வெல்லம் மற்றும் எலுமிச்சை தண்ணீர் செய்வது எப்படி?

வெல்லத்தை சிறிதளவு எடுத்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீரை வடிகட்டி சாதாரண வெப்பநிலை வரை ஆறவிடவும். எலுமிச்சை தண்ணீர் 1 தேக்கரண்டி சேர்க்கவும். அதை கலந்து குடிக்கவும். அவ்வளவுதான். நிறைய நன்மைகள், ஆரோக்கியம் உடம்புக்கு கிடைக்கிறது. எனவே, வெள்ளை சர்க்கரையான அஸ்கா பயன்பாட்டை தவிர்த்து விட்டு வீடுகளில், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தலாம். காபி, டீ போன்றவை தயாரிக்க வெல்லம் பயன்படுத்தலாம். லட்டு, மைசூர்பா, ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பலகாரங்களை செய்ய வெல்லத்தை உபயோகிக்கலாம். உடல் நலம் ஆரோக்கியம் வேண்டும் என நினைப்பவர்கள் உடனடியாக வெல்லத்துக்கு மாறிவிடுங்கள்!

Tags

Next Story