Benefits Of Mint Leaves ரத்தத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் புதினா ...தெரியுமா?...

Benefits Of Mint Leaves  ரத்தத்தை அதிகரித்து நோய் எதிர்ப்பு  சக்தியை உருவாக்கும் புதினா ...தெரியுமா?...
X
Benefits Of Mint Leaves விக்கல் வந்தால் சிறிது நேரத்தில் மறைந்து போவதும் உண்டு. ஒரு சிலருக்கு தொடர்ந்து விக்கல் இருந்துகொண்டே கஷ்டத்தைக்கொடுக்கும். எந்த விக்கலாக இருந்தாலும் உடனே நிறுத்த புதினா சூரணம்தான் நல்ல பலனைக் கொடுக்கும்.

Benefits Of Mint Leaves

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் வாரம் இருமுறையோ அல்லது மூன்றுமுறையோ கீரை வகைகளைக் கட்டாயம் சேர்ப்பது நல்லது. மாறிவரும் நாகரிக உலகில் பலரும்இதுபோன்ற சத்துமிகுந்த காய்கறிகள், கீரை வகைகளைத் தவிர்த்துவிட்டு ஃபாஸ்ட் புட் என்று சொல்லும் உணவில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால் இயற்கையில் விளைந்து நமக்கு உணவுப் பொருளாக பயன்படும்கீரைகளில் நமக்கு தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த வகையில் புதினா இது உணவில் சேர்ப்பு பொருளாக நறுமணத்திற்காக சேர்க்கப்படுகிறது. இதனை சட்னியாக செய்து சாப்பிட்டால் ருசி மிகுந்ததாக இருக்கும்.

புதினா கீரை பலவித பிணிகளை அகற்றும் அற்புத குணமுடையது. இதனை உட்கொள்வதன் மூலம் நல்ல ரத்தத்தை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வைக்கும்.

புதினா கீரையை சித்த மருத்துவத்தில் ஈயெச்சக் கீரை என்று கூறுவார்கள். புதினாக் கீரை கீழ்வரும் நோய்களை நலமாக்கும் வீரியம் மிக்கதாகும். வாந்தி, சளி, இருமல், ஆஸ்துமா, மூட்டுவலி, மஞ்சள் காமாலை , வாயுத்தொல்லை, வயிற்றுவலி, வயிற்று உப்புசம் , மலச்சிக்கல், பசியின்மை, தோலில் வறட்டுத்தன்மை, பித்தம் , நுரையீரல், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற பல நோய்களை அகற்றும் அற்புத மூலிகையாகும்.

அபூர்வ மூலிகையான புதினா கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பலவித நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Benefits Of Mint Leaves


புத்துணர்வுக்கு புதினா நீர்

தினசரி காலையும் மாலையும் டீ அல்லது காபி அருந்துவதற்குப் பதிலாக புதினா நீர் அருந்தினால் உடல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.டீ அருந்துவதற்குப் பதிலாக புதினாக்கீரையை காயவைத்து துாளாக்கிக்கொண்டு இரண்டு தேக்கரண்டி பொடியை வெந்நீரில் கொதிக் கவைத்து பால் சேர்த்து அருந்தி வந்தால் நோய்கள் இருப்பின் குணமாகும். அத்துடன் நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

புதினா துவையல்

புதினாக்கீரையைத் துவையலாக்கிச் சாப்பிட்டால் பலவித நோய்கள் குணமாகும். புதினாக் கீரை ஒருசிறிய கட்டு, பிரண்டைத்துண்டு 50 கிராம், பழைய புளி 75கிராம், இஞ்சி ஒரு துண்டு,மிளகு, சீரகம், சிறிதளவு பூண்டு இரண்டு, கறிவேப்பிலை , கொத்தமல்லி, அத்துடன் ஒரு கையளவு உளுத்தம்பருப்பு, இவைகளைச் சேர்த்து சிறிது எண்ணெய்விட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

அதனை அம்மியில் வைத்து தேவையான உப்பு சேர்த்து மைபோல் அரைத்து எடுத்து துவையலாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி எலுமிச்சம்பழம் அளவு எடுத்துச் சோற்றில் கலந்து அத்துடன் சிறிது நெய்விட்டு பிசைந்து மூன்று உருண்டைகள் சாப்பிட்டப் பின்னர் அன்றாட சமையலின்படி மற்ற காய்கறிகளைச் சேர்த்து உணவைச் சாப்பிடவும்.

இதுபோன்று 40 நாட்கள் சாப்பிட்டாலே உடலிலுள்ள எல்லா நோய்களும் அகன்றுவிடும். சரும நோய்கள் இருப்பின் நீங்கிவிடும்.

குரல் வளத்திற்கு

பாடகர்கள் குரல் வளம் பெறவும், பேச்சாளர்கள் பிசிறின்றி உரக்க தெளிவாக பேசவும், புதினா மிகவும் உதவிகரமாக இருக்கிறது. புதினாக்கீரையைச் சுத்தமாக்கி கஷாயமாக்கி கொண்டு அதில் சிறிது உப்புச் சேர்த்து எடுத்துக்கொள்ளவும். இந்த கஷாயத்தினால் தினசரி வாயைக் கொப்பளிக்க வேண்டும்.இதனால் இனிமையான குரல்வளத்தைப் பெறலாம்.

Benefits Of Mint Leaves


குமட்டல் குணமாக

சிலருக்கு குமட்டல் வரும். ஆனால் வாந்தி வராது. அதனால் அதிக ஓசையுடன் குமட்டல் வந்து கொண்டே இருக்கும். இதனால் மிகவும் சிரமமாக இருக்கும். ஆதலின்இதைனை நிறுத்தஒரு சிறந்த வழி ஒரு கைப்பிடி புதினாக் கீரையுடன் ஒரு துண்டு இஞ்சித் துண்டு , மிளகு எடுத்துத் தட்டி இவற்றையெல்லாம் ஒரு மட்பாண்டத்தில் போட்டு நான்கு டம்ளர் நீர்விட்டுக்காய்ச்சவும்.

அது இரண்டு டம்ளராகச் சுண்டியதும் வடிக்கட்டி எடுத்து அதில் 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதனை அரைமணிக்கு ஒரு தடவை ஒரு முடக்கு வீதம் குடித்துவந்தால் தொடர்ந்து தொல்லைக்கு கொடுத்தகு மட்டல் குணமாகிவிடும்.

சர்வ வாதத்திற்கு

வாத சம்பந்தமாக கஷ்டப்படுகிறவர்கள் , இருதய நோய் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்காணும் முறையைக் கையாண்டு நிவாரணம் பெறலாம். புதினாக் கீரையை ஆய்ந்து சுத்தமாகக் கழுவி நன்றாக நைந்து கால்லிட்டர் சாறு எடுத்துக்கொள்ளவும். அதில் இஞ்சி, சுக்கு, பூண்டு, பெருங்காயம், ஆகியவற்றைத் தேவைக்கேற்ப சிறிதளவு சேர்த்து அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். காய்ச்சியதும், கீழே இறக்கிவடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதில் அரை அவுன்ஸ் அளவு எடுத்து தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து தினமும் சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் பசும்பால் சூடாக சாப்பிடவும். இதுபோன்று தினசரி காலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்வ வாதம்இருதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சூதக வலி, ஆண்மை பெருக்கம்

பெண்கள் மாத விலக்கினால் கஷ்டப்பட்டாலோ, இல்லற இன்பத்தில் சுகம் பெறவும் புதினாக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெண் மாத விலக்கானது முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சூதகச் சிக்கல்கள் நீங்கும்.

விக்கல் நிற்க புதினாசூரணம்

விக்கல் வந்தால் சிறிது நேரத்தில் மறைந்து போவதும் உண்டு. ஒரு சிலருக்கு தொடர்ந்து விக்கல் இருந்துகொண்டே கஷ்டத்தைக்கொடுக்கும். எந்த விக்கலாக இருந்தாலும் உடனே நிறுத்த புதினா சூரணம்தான் நல்ல பலனைக் கொடுக்கும். புதினாக்கீரையை வேருடன் பிடுங்கி வந்து சுத்தமாகக் கழுவிநன்றாக உலர்த்தி இடித்துத் துாளாக்கிக் கொள்ளவும். பின்னர் அதேஅளவு அரிசி திப்பிலியை உலர்த்திஇடித்துத் துாளாக்கிக் கொள்ளவும். அதன் பின்னர் இரண்டு துாள்களையும் சம அளவாக எடுத்து ஒன்று சேர்த்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ளவும். விக்கல்இருந்தாலோ தொடர் விக்கலாக இருந்தாலும் இந்த சூரணத்திலிருந்து கால்டிஸ்பூன் எடுத்து அசல் தேனில் குழைத்து சாப்பிடவும். உடனடியாக விக்கல் நின்றுவிடும்.

Benefits Of Mint Leaves



கீரிப்பூச்சிகள்

கீரிப்பூச்சிகள் குடலில் சேர்த்து தொந்தரவு கொடுத்தால் உடனடியாக புதினா இலையைக்கொண்டு வந்து கஷாயம் செய்து இரண்டு வேளைகள் வீதம் 3நாட்கள் சாப்பிட்டால் போதும். குடலிலுள்ளகீரிப்பூச்சிகள் வெளிவந்துவிடும்.

டிபிக்கு மருந்து புதினா

மூச்சுவிட சிரமப்படும் ஆஸ்துமா, டிபி நோயாளிகளுக்கு சிறந்த டானிக்காக இருக்கிறது புதினா. ஒரு தேக்கரண்டி புதினாக் கீரையின் சாறில் ஒரு டம்ளர் காரட்சாறு, சேர்த்து அத்துடன் ஒருஸ்பூன் வினிகர் இரண்டு ஸ்பூன் சுத்தமான தேன், சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட நோயால் மூச்சுவிட சிரமப்படுகிறவர்கள் தினசரி ஒரு வேளைமட்டும், அருந்தவும். இதுபோன்ற தினசரி இதனைச் சாப்பிட்டு வந்தால் டானிக்காக இருந்து உடலைத் திடமாக்குகிறது. தவிரகட்டியான சளி நீர்த்துப் போவதுடன் மேலும் நோய்க்கிருமிகள் சேர்வதும் தடைப்பட்டு நோய் குணமாகிறது.

பல் ஈறுகளில் கோளாறு

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாக இருந்தாலும் புதினாக் கீரையை பச்சையாக மென்று சாப்பிடவும். அல்லது புதினாக்கீரையை நன்கு உலர்த்தி துாளாக்கிக்கொண்டு இத்துாளினால் தினசரி பல் துலக்கிவரவும். இதுபோன்று செய்வதினால் பல் ஈறுகளில் உண்டாகும் கோளாறு முதல் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதுடன் மேற்கொண்டு பற்களில் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது