west bengal election 2023 result- மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி
west bengal election 2023 result
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று நடந்து வருகிறது. பாதிக்கும் மேலான இடங்களில் ஆளும் கட்சியான முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மேலும் பல இடங்களில்இக்கட்சியானது தொடர்ந்து முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது. மாநிலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நிறைவடைந் த நிலையில் அண்மையில் அம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 8ந்தேதி நடந்தது. பல இடங்களில் வன்முறை வெடித்து மறு தேர்தல் நடந்தது. மறுதேர்தலிலும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது.
மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலில் திரிணமுல், காங்கிரஸ், பாஜ, இடது சாரிகள், என அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவே களம் இறங்கியது. பல இடங்களில் பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தது. இதில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த 8 ந்தேதி பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது இன்று காலை துவங்கியது. மதியம் 2.30 நிலவரப்படி 8232 இடங்களில் ஆளும் கட்சியான திரிணமுல் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 2712 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜ 1714 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 734 இடங்களில் முன்னிலை வகித்து இரண்டாமிடத்தினை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் 362 இடங்களில் வெற்றியும் 215 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.
என்னதான் வன்முறை நடந்தாலும் ஆளும் கட்சியே பல இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளதையடுத்து திரிணமுல் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் கலர் பொடிகளைத் துாவியும் தங்களுடைய வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu