பெட்ரோல், டீசல் விலை இப்போது குறைக்கப்பட வாய்ப்பே இல்லையாம்

பெட்ரோல், டீசல் விலை இப்போது குறைக்கப்பட வாய்ப்பே இல்லையாம்

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி.

பெட்ரோல், டீசல் விலை இப்போது குறைக்கப்பட வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 592-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் நீடிக்கிறது. இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் மோடி மீதான தேசிய முற்போக்கு கூட்டணி பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு பெரிய பேசுபொருளாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலை தீபாவளி பண்டிகை நேரத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இதனை தொடர்ந்து 2024ம் ஆண்டு தொடங்கிய புத்தாண்டு தினத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் இப்போது இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Tags

Next Story