/* */

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: துணைநிலை ஆளுநர் தமிழிசை சுதாரிப்பு..!

புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியை சுதாரித்து உடனே சரி செய்தார், துணைநிலை ஆளுநர் தமிழிசை.

HIGHLIGHTS

அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: துணைநிலை ஆளுநர் தமிழிசை சுதாரிப்பு..!
X

புதுச்சேரியில் மத்திய சுகாதார அமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் பேசும் துணை நிலை ஆளுனர் தமிழிசை.

புதுச்சேரியில், ஜிம்பர் மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி துவக்கத்தில் மருத்துவ துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் மட்டும் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் விழா தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து உடனடியாக இசைக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் ஆகிய இருவரும் ஜிப்மர் இயக்குனரை கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, இசைக்கப்பட்டது. துணை நிலை ஆளுனர் தமிழிசை சுதாரித்ததால் குளறுபடி சரிசெய்யட்டது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதையடுத்து பேசிய தமிழிசை, இது, அறியாமல் நடந்த தவறு, இதனை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 25 Jun 2022 11:37 AM GMT

Related News