உத்தரகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணி வெற்றி

உத்தரகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணி வெற்றி

தொழிலாளர்களை மீட்பதற்காக தயார் நிலையில் உள்ள  பேரிடர் மீட்பு படையினர்.

உத்தரகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்கும் பணி வெற்றி அடைந்து உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.இந்த பணியின் போது சுரங்கப்பாதைக்குள் மலைப்பாறைகள் இடிந்து விழுந்ததால் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கினார்கள். அவர்களை உயிருடன் மீட்கும்பணி உடனடியாக தொடங்கியது.

முதலில் ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கத்தை சுற்றி தோண்டப்பட்டது. இந்த பணியில் தமிழகத்தை சேர்ந்த நிபுணர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். ராணுவத்தினர் வந்து மீட்புபணிகளை செய்தனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் சுவாச காற்று ஆகியவை குழாய் மூலம் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியானது. இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் சையது அடா ஹஸ்னைன் கூறுகையில் மீட்புப் பணி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மட்டுமின்றி ராணுவம், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

ஒருவர் வெளியேற 3ல் இருந்து 5 நிமிடங்கள் வரை ஆகும். 41 பேரும் வெளியேற 3 முதல் 4 மணி நேரங்கள் ஆகலாம்.சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக 400 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தயார்நிலையில் ஆம்புலன்சுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

Tags

Next Story