இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை

ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியது.

நமது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் திரௌபதி முர்மு. நாட்டின் ஜனாதிபதியாக அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியேறிவிட்டார். இதையடுத்து அவரது புதிய முகவரிக்கு பல்வேறு அடையாள அட்டைகளையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையின் முகவரியில் திரௌபதி முர்முவிற்கு புதிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேற்று அவரது மாளிகையில் நேரில் சந்தித்து புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். அப்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் பற்றிய விவரத்தையும் விளக்கி கூறினார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் திரௌபதி இனி தனது வாக்கை பதிவு செய்ய முடியும். முந்தைய வாக்காளர் அடையாள அட்டையில் அவரது பூர்வீகமான ஒடிசாவின் மையூர் பஞ்ச் முகவரி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story