ஹூப்ளி- ராமேஸ்வரம் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஹூப்ளி- ராமேஸ்வரம் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு  நீட்டிப்பு
ஹூப்ளி- ராமேஸ்வரம் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹூப்ளி (கர்நாடகா) -ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்.07355 / 07356 ஹூப்ளி ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

ரயில் எண்.07355 ஹூப்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 06.01.2024 முதல் 30.03.2024 வரை சனிக்கிழமைகளில் 06.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 06.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்

ரயில் எண்.07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 07.01.2024 முதல் 31.03.2024 வரை பகல் 21.00 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் ஹூப்ளியை 19.25 மணிக்கு சென்றடையும்.

பெட்டிகள்: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.

நிறுத்தங்கள்: ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, சிக்ஜாஜூர், பிரூர், அரசிகெரே, தும்கூர், யஸ்வந்த்பூர் பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம்.

சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நேரங்கள்:

ரயில் எண்.07355 ஹூப்ளி -ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்:

(சனிக்கிழமைகளில்) சேலம் – 19.50/19.55 மணி; நாமக்கல் 20.44/20.45 மணி; கரூர் – 21.58/ 22.00 மணி.

ரயில் எண்.07356 ராமேஸ்வரம் ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில்:

(திங்கட்கிழமைகளில்) கரூர் – 03.48/03.50 மணி; நாமக்கல் – 04.19/04.20 மணி; சேலம் 05.45/05.50 மணி.

வண்டி எண்.07356

ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து 07.01.2024 முதல் 31.03.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 21.00 மணிக்குப் புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் 19.25 மணிக்கு ஹுப்பள்ளி சென்றடையும்.

பெட்டிகள்: ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு,

ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் கோச்சுகள்.

நிறுத்தங்கள்: ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, சிக்ஜாஜூர், பிரூர், அரசிகெரே, தும்கூர், யஸ்வந்த்பூர் பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் ராமநாதபுரம்

மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஹூப்ளி – ராமேஸ்வரம் -ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில்கள் ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹூப்ளி – ராமநாதபுரம் – ஹூப்ளி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story