5 கோடியைத் தாண்டியது கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை

இந்தியாவில், 5 கோடியைத் தாண்டியது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது. கொவிட்- 19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஐந்து கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 8,23,046 முகாம்களில் 5,08,41,286 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79,17,521 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 50,20,695 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 83,62,065 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 30,88,639 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 47,01,894 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,17,50,472 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 77.44% பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28,699 பேரும், பஞ்சாபில் 2,254 பேரும், கர்நாடகாவில் 2,010 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 3,68,457 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.14 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,05,160 ஆக (95.49%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23,907 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கடந்துள்ளது. கொவிட்- 19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஐந்து கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 8,23,046 முகாம்களில் 5,08,41,286 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79,17,521 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 50,20,695 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 83,62,065 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 30,88,639 முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 47,01,894 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 2,17,50,472 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 77.44% பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28,699 பேரும், பஞ்சாபில் 2,254 பேரும், கர்நாடகாவில் 2,010 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 3,68,457 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.14 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,05,160 ஆக (95.49%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 23,907 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu