Sinus Disease Symptoms And Precautions சைனஸ் என்பது என்ன?... அது எதனால் ஏற்படுகிறது....சிகிச்சைகள் என்னென்ன?....

Sinus Disease Symptoms And Precautions  சைனஸ் என்பது என்ன?... அது எதனால்  ஏற்படுகிறது....சிகிச்சைகள் என்னென்ன?....
Sinus Disease Symptoms And Precautions நம் முகத்திலுள்ள எலும்புகளில் சில காற்றறைகள் இருக்கின்றன. அவை தான் சைனஸ். நாம்சுவாசிக்கும் காற்றின் வெப்பநிலையை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்தி தருவதுதான் இவற்றின் வேலை.

Sinus Disease Symptoms And Precautions

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் பல வகைகள் உள்ளன. அதுவும் தற்போதைய நாகரிக உலகில் தினந்தோறும் புதுப்புது நோய்கள் அவதாரமெடுத்து தாக்குகின்றன. ஒரு சில நேரங்களில் மெத்த படித்த டாக்டர்களினாலேயே இனங்காண முடியாத நோய்களும் வருகின்றன. பல கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் டாக்டர் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சையைத் துவக்குகிறார். பின் படிப்படியாக அதன் வீரியத்தைக் கண்டு சிகிச்சையைத் தீவிரப்படுத்துகின்றனர். இதுதான் இன்றைய நிலைமை. அந்த வகையில் சைனஸ் நோய் என்பது ஒரு சிலரைப் பாதிக்கிறது. அந்நோய் எதனால் வருகிறது. அதனைத் தடுப்பது எப்படி?... முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

நம்மில் ஒரு சிலருக்கு தலைவலியானனது அடிக்கடி வரும்.ஒரு சிலருக்கு மூக்கு அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர் சைனல் பிராப்ளத்தினால்தான்அவதிப்படுவது போன்ற உணர்வில் இருப்பார்.

Sinus Disease Symptoms And Precautions


சைனஸ் என்றால் என்ன?

நம் முகத்திலுள்ள எலும்புளின் சில காற்றறைகள் இருக்கின்றன. அவை தான் சைனஸ். நாம்சுவாசிக்கும் காற்றின் வெப்பநிலையை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்தி தருவதுதான் இவற்றின் வேலை. மூக்கிலுள்ள வெப்பநிலை கண்களையும்,மூளையையும் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வதும் இவைதான். நாம் பேசும்போது குரல் தெளிவாக இருக்கவும், முக எலும்புகளின் கனம்குறையவும் இவை உதவுகின்றன.

இப்படி பல பொறுப்புகளை ஏற்றிருக்கும் சைனஸ் என்னும் காற்றறைகள் மொத்தம் நான்கு அவையாவன.

*பொட்டுஎலும்புக் காற்றறை (பிரான்டியல் சைனஸ்)

*மெத்தை எலும்புக்காற்றறை (எத்மாய்டல்சைனஸ்)

*ஆப்பு எலும்புக்காற்றறை (ஸ்ஃபீனாய்ட் சைனஸ்)

*மேல்தாடை எலும்பு காற்றறை(மேக்ஸிலரி சைனஸ்) ஆகும்.

Sinus Disease Symptoms And Precautions


நோய்க்கான அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்பத்தில் அடிக்கடி தும்மல் ஏற்படும். மூக்கிலிருந்து நீர் அருவியாக கொட்டும். சிலருக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும்.

பிறகு தலைவலி உண்டாகும். தலையில் பாரம் வைத்துள்ள மாதிரி கனமாக இருக்கும். கன்னங்களையோ முன் நெற்றியையோ ,தொட்டால் வலிக்கும். கண்களுக்குகீழும் வலி ஏற்படலாம். லேசான காய்ச்சல், சோர்வு, பசிக்குறைவு, போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். நாள்பட்ட நோயாளிகளுக்கு மூக்கைச் சிந்தும் போது துர்நாற்றத்துடன் கூடிய சளி வெளியேறும். சில சமயங்களில் அதிக ரத்தம் கலந்திருக்கும்.

தலைவலி எங்கு..எப்படி ஏற்படும்?

இந்நோய் வந்தவர்களுக்கு மற்ற அறிகுறிகளைவிட தலைவலிதான் பிரதான தொல்லையாக தெரியும். தலைவலியானது காற்றறை அழற்சி எங்கு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து இடம் மாறும். உதாரணமாக பொட்டு எலும்பு காற்றறையில் அழற்சி ஏற்பட்டால் நெற்றியிலும், நெற்றியின் அடிப்பாகத்திலும் தலைவலி கடுமையாக இருக்கும். கண்களுக்குமேல் சிறு வீக்கம் கூட காணப்படலாம். இந்ததலைவலி அதிகாலையில் அதிகமாகஇருக்கும். மதியம் வரைஅதிகரித்துக்கொண்டே போய் மாலையில் குறைந்துவிடும்.

மெத்தை எலும்புக்காற்றறை அழற்சியில் தலைவலி இடைவிடாமல்இருக்கும். நெற்றியிலும் மண்டைக்குப் பக்க வாட்டிலும் தலைவலி பரவும். ஆப்பு எலும்பு காற்றறை அழற்சியின் போது கண்களுக்கு பின்னால் விட்டுவிட்டு தலைவலி ஏற்படும். உச்சந்தலை,பின்தலை, காதின் பின்புறம் ஆகியவற்றிலும் வலி ஏற்படலாம்.

மேல்தாடை எலும்பு காற்றறை அழற்சியில் கன்னம் முழுவதும் வலிக்கும். குனியும்போதும், இருமும்போதும், வலி அதிகமாகும். காலையில் உறங்கி எழும்போது , தலைவலி அதிகமாக இருக்கும். மதியம் வரைஅதிகரிக்கும். மாலையில் வலிகுறைந்துவிடும்.

Sinus Disease Symptoms And Precautions


சிகிச்சை என்ன?

தலைவலியைக் குறைப்பதற்கு வலி நிவாரணி மாத்திரைகளையும் , ஊசிகளையும், முதலில் பரிந்துரைப்பார்கள். அத்துடன் தும்மல், ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கொழுகல், அலர்ஜிபோன்றவற்றிற்கு ஹிஸ்டமின் எதிர்மருந்து களைத்தருவார்கள்.

நோய்க்கிருமிகளை ஒழிக்க, நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை சுமார் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சாப்பிட வேண்டும். தலைவலி மிக கடுமையாக இருந்தால் வெப்ப சிகிக்சை தரப்படும். இதற்கு பதிலாக வீட்டிலேயே கன்னத்திலும், நெற்றியிலும், வெந்நீர் ஒற்றடம் கொடுத்துக்கொள்ளலாம்.

ஆவிபிடித்தல்

மூக்கடைப்பு முழுமையாக நீங்க நீர் ஆவி பிடிக்கலாம். இதற்கு நெல்சன்ஸ் இன்ஹேலர் என்றும்பெயரில் ஒரு பீங்கான் பாத்திரம் உள்ளது. அதில் வெந்நீர் சுடவைத்து ஆவிபிடிக்கலாம். அல்லது டிங்க்சர் பென்சாயின் என்னும் மருந்தினை தண்ணீரில் 20 சொட்டுகள் விட்டு, கலக்கி காய்ச்சி 5 நிமிடங்களுக்கு ஆவிபிடிக்க வேண்டும். டிங்சர் பென்சாயினுக்கு பதிலாக மென்தால் மருந்தையும், உபயோகிக்கலாம். தினமும் காலை இரவு இரண்டு வேளைகளில் நீராவி பிடித்தால் சைனஸ் தொல்லை விரைவில் குறைய வாய்ப்புள்ளது.

Sinus Disease Symptoms And Precautions


நோயைக் கவனிக்க தவறினால்

இந்நோயை சரியாக கவனிக்காவிட்டால் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் . முக எலும்புகளில் அழற்சி (ஆஸ்டியோமைலிட்டிஸ்) ஏற்படலாம். எலும்பு வெளியுறையில் சீழ் சேரலாம். மூளைக்கு நோய்த்தொற்று பரவி மூளை உறை அழற்சி (மேனிங்கிட்டிஸ்)மூளைக்காய்ச்சல் (என்சிபாலிடிஸ்) விரிக்கோளச்சீழ்கட்டி போன்ற உயிருக்கு ஆபத்தான பின் வினைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே காலத்தோடு சைனஸ் கோளாறுக்கு சிகிச்சை பெற்றுவிடுவது நல்லது.

தவிர்ப்பது எப்படி?

*அடிக்கடி ஜலதோஷம், பிடிப்பதை தவிர்த்தால் சைனஸ் கோளாறை நிச்சயம் தடுக்கலாம். குறிப்பாக ஒவ்வாமை உள்ளவர்கள் எதற்கு ஒவ்வாமை ? என்பதை தெரிந்துகொண்டு அவற்றை விலக்கி வைக்க வேண்டும்.

*துாசு, ஒட்டடை, பஞ்சு போன்றவை மூக்கில் நுழைவதை தடுக்க மூக்கின் உள்ளே ஃபில்டர் அணிந்து கொள்ளலாம். மூக்கில் மாஸ்க் கட்டிக்கொள்ளலாம்.

*ஐஸ், ஐஸ்க்ரீம், போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருள்களை அவசியம் தவிர்க்கவேண்டும். குளிர்பானங்களைக் குடிக்ககூடாது. பனியில் அலைய கூடாது. மழையில் நனைய கூடாது. அசுத்த நீர்நிலைகளில் குளிக்க கூடாது. புகைபிடித்தல்கூடாது. மூக்குப்பொடி போடக்கூடாது.

*மூக்கின் இடைச்சுவர் வளைந்துள்ளவர்கள் அதைஅ றுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.

*தினமும் காலையில் எழுந்ததும் சுத்தமான காற்றுள்ள இடங்களில் நடக்க வேண்டும். இயலாதவர்கள் வீட்டிலேயே பத்து நிமிடங்களுக்கு பிரணாயாமம் செய்ய வேண்டும். இதனால் மூக்கு சுத்தமாகும். கிருமிகளுக்கு இடம் கிடையாது. பிறகு சைனஸ் கோளாறுகளுக்கு அங்கே என்ன வேலை -? இதையெல்லாம் முறையாக கடைப்பிடித்தால் வரும் சைனஸையும் துரத்தி விடலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story