சீனு ராமசாமியா இப்படி? அதிர்ச்சியளிக்கும் வீடியோ..!
இயக்குநர் சீனு ராமசாமியா இப்படி என்று வைரலாகும் வீடியோவைப் பார்த்த அனைவரும் வரிசையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் எதார்த்தமான இயக்குநர் என பெயர் வாங்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தைக் காண ரசிகர்கள் நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பகீர் குற்றச்சாட்டு முன்வைத்து வீடியோ வைரலாக அதைப் பற்றி பலரும் பேசத் துவங்கிவிட்டனர். இது ஆரம்பித்தது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்துதான்.
விசித்ராவின் வேதனை
பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு காரணம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் குறித்து அவர் எழுப்பியுள்ள மானபங்க குற்றச்சாட்டுதான். தனது இளமைகாலத்தில் படப்பிடிப்பில் நடந்த ஒரு கேடுகெட்ட செயலைப் பற்றிதான் விசித்ரா பகிர்ந்திருந்தார்.
அதில் பிரபல நடிகர் ஒருவர் தன்னைக் காண அறைக்கு வரச் சொல்லி அனுப்பியதாகவும், ஆனால் தான் போக மறுத்ததால் அவர் தனது ஆள்களை அனுப்பி பல்வேறு வன்ம நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் பேசினார். இதனால் இந்த வாரம் மிகப்பெரிய அளவில் இந்த விசயம் விவாதமானது.
இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் தெலுங்கு சினிமா மட்டுமில்லை தமிழ் சினிமாவும் அப்படித்தான் என்று பல விசயங்களைப் போட்டுடைத்தார். அப்படி அவர் பேசிய ஒரு விசயம்தான் சீனு ராமசாமி குறித்தது. நடிகையின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் பேசிய விசயம், பின் அதில் சம்பந்தப்பட்ட நடிகையே பேசும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிவிட்டது.
சீனு ராமசாமியா இப்படி?
இயக்குநர் சீனு ராமசாமி மீது பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். அவர், சீனு ராமசாமி, நடிகை மனிஷா யாதவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டிற்கு, சீனு ராமசாமி, தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட நடிகை மனிஷா யாதவ் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
நடிகை மனிஷா யாதவ் தனது X வலைதளத்தில், நடிகை மனிஷா யாதவ் வெளியிட்டுள்ள பதிவில் 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதும் இணைந்து பணியாற்ற மாட்டேன். சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு" என்று கூறியுள்ளார்.
நடிகை மனிஷா யாதவின் இந்த பதிவு மூலம், பிஸ்மி சொன்னதில் எந்த பிழையும் இல்லை அவர் நடந்ததைத் தான் கூறியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu