அஜித் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க? வைரல் புகைப்படம்!

அஜித் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க? வைரல் புகைப்படம்!
X
2015ம் ஆண்டு இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டார்.

ரெட் படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்த பிரியா கில் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ரெட் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியா கில். இவர் மாடல் அழகியாக இருந்து பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார்.

1996ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தேரி மேரா சப்னா திரைப்படம்தான் இவரது முதல் படம். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன தயாரிப்பில் சந்திரச்சூர் சிங், அர்ஷத் வர்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இந்த படம் வெளியானது.

ஆனால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியாகி வரவேற்பும் கிடைக்காமல் தோல்வியடைந்தது. அதேநேரம் இந்த நாயகி பிரியா கில் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறினார்.

அடுத்தடுத்து பல படங்கள் இவருக்கு கிடைத்தன. சுனில் ஷெட்டியுடன் படே தில்வாலா படத்தில் இவர் நடித்திருந்தார். அகத்தியல் இயக்கிய சிர்ஃப் தும் எனும் மலையாள படத்தின் மூலம் மாலிவுட்டிலும் அறிமுகமானார். அடுத்து மம்மூட்டியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் ஜோடியாக தமிழில் ரெட் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருந்தாலும், அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தி படங்களுக்கே திரும்பிவிட்டார். தற்போது பஞ்சாபி, ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த 2006ம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம்தான் இவர் நடித்த கடைசி திரைப்படம். அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.

2015ம் ஆண்டு இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்டார். டென்மார்க்கில் அவர் மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Tags

Next Story