/* */

தனலட்சுமி ஷிவினை கீழே தள்ளியதால் ரணகளமானது பிக்பாஸ் வீடு

bigg boss season tamil 6, shivin ganesan dhanalakshmi fightதனலட்சுமி ஷிவினை கீழே தள்ளியதால் பிக்பாஸ் வீடு ரணகளமானது.

HIGHLIGHTS

தனலட்சுமி ஷிவினை கீழே தள்ளியதால் ரணகளமானது பிக்பாஸ் வீடு
X

பிக்பாஸ் வீட்டில் ஒரு அடிதடி காட்சி.

bigg boss season tamil 6, shivin ganesan dhanalakshmi fightஉலகநாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6நிகழ்ச்சி தற்போது களை கட்ட துவங்கிவிட்டது. பிக்பாஸ் வீட்டில், தனலட்சுமி ஷிவின் இருவரும் டபிள்யு டபிள்யு எப் ரேஞ்சிற்கு சண்டை போட்ட வீடியோ இணையத்தில் டிரண்டாகி வருகிறது.பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதற்காக பிக் பாஸ் வீடு காடாக மாற்றப்பட்டுள்ளது.

bigg boss season tamil 6, shivin ganesan dhanalakshmi fightஇதனால், இந்த வாரம் முழுக்க சண்டை சர்ச்சரவு என வீடே அதிரிபுதிரி ஆனது. இதில் வழக்கம் போல அனைத்து போட்டியாளர்களிடமும் அசீம் சண்டை போட்டார்.கதிரின் கால், கைகளை கட்டி போட்ட போது, கதிரும் அமுதவாணனும் வீட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது, கதிர் வலிக்கிறது வலிக்கிறது என்று கத்தியதால், அசீம், அமுதவாணனிடம் இப்படி விளையாடக்கூடாது இது சரியா முறைஇல்லை என்றார். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றியதால், யார் பெரிய ஆள் என்று அடித்துப்பார் என ஒருவரை முட்டிமோதி பேசிக்கொண்டனர் இதையடுத்து, அமுதவாணன் அசீம் தன்னை அடித்துவிட்டதாக கத்தி கூச்சலிட்டார்.

bigg boss season tamil 6, shivin ganesan dhanalakshmi fightஅமுதவாணனை அசீம் அடித்துவிட்டதால், மொத்த போட்டியாளர்களும் அசீமை திட்டினார்கள். இதனால், மன உளைச்சலில் இருந்த அசீம் மயங்கி விழுந்தார். இதையடுத்து அனைத்துப்போட்டியாளர்களும் அவரை மெடிக்கல் ரூமுக்கு தூக்கிச்சென்றனர். இதையடுத்து, ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாக்ஸ் ஒரு வழியாக முடிவடைந்தது. அந்த டாஸ்கில் ஷிவின், தனலட்சுமி,மணிகண்டன் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

bigg boss season tamil 6, shivin ganesan dhanalakshmi fightஅப்போது தனலட்சுமி ஷிவினின் முடியை பிடித்து, நெஞ்சில் கை வைத்தும் ஆக்ரோஷமாக தள்ளி விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். பொம்மை டாஸ்க்கில் அசீம் லேசாக தள்ளியதற்கு தனலட்சுமி என்னவெல்லாம் பேச்சு பேசினார். அப்போது, ஷிவினை இப்படி தள்ளிவிடலாமா என்று, தனலட்சுமிக்கு எதிராக இணையத்தில் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

Updated On: 3 Dec 2022 4:02 PM GMT

Related News