ராஜா ராணி 2வில் இது என்ன புது பிரச்னை?
சரி பிசினஸ் லைசன்ஸ் குடுங்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு இவர் லைசன்ஸ் .... லைசன்ஸ் என்று திகைத்து நிற்கிறார். என்ன சொல்வது என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார்.
அதுவும் வீட்லதான் இருக்கா என்று கேட்கிறார் நிர்வாகி. மேலும் அதோட காப்பியாச்சும் இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கும் பரிதவித்து நிற்கிறார்.
மற்ற பியூட்டி பார்லர் போயி பாத்துருக்கீங்களா? லைசன்ஸ் காப்பியை பிஃரேம் போட்டு வால்ல மாட்டிருப்பாங்க. கவனிச்சிருக்கீங்களா என்கிறார் உயர் அதிகாரி ஒருவர். இன்னும் லைசன்ஸ் எடுக்கல சார் என்று கூறுகிறார்.
உடனடியாக அந்த அதிகாரி குடைந்து குடைந்து பல கேள்விகளைக் கேட்கிறார். எந்த ஒரு லைசன்ஸும் இல்லாமல்தான் நீங்கள் இப்படி பியூட்டி பார்லர் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார். ஒரு கோர்ஸ் முடிச்சிட்டா நீங்களே பார்லர் ஒபன் பண்ணலாம்னு நினச்சிட்டீங்களா?
நீங்க பயன்படுத்துற பொருட்களால இங்க வர்ற கஸ்டமருக்கு ஏதாது பிரச்னை வந்துச்சின்னா எத்தன பேருக்கு நாங்க பதில் சொல்லணும் தெரியுமா என்று கேட்கிறார்கள். எதற்கும் பதில் சொல்ல முடியாமல் திகைக்கிறார். நீங்க கொஞ்சம் வெளியில இருங்க என்று அதிகாரி அவரை மிரட்டுகிறார். அதிகாரிகள் அனைவரும் அவரை வெளியே செல்ல சொல்கின்றனர்.
பயந்து போய், தன் கணவன் ஆதியை அழைக்கிறாள் அவள். தனக்கு பயமாக இருப்பதாகவும் இப்படி அதிகாரிகள் கூறியதாகவும் கூறி அவனை வரச் சொல்கிறாள், பின் அவன் வருவதாக கூறியதும் வெளியில் காத்திருக்கிறார்.
இந்த பக்கம் போலீஸ் அதிகாரியான சந்தியா, எஸ்பி அலுவலகத்தில் காத்துக் கிடக்கிறாள். அதனைப் பார்த்தும் எஸ்பி அவளை அழைக்காமல் வேண்டுமென்றே காத்திருக்க வைக்கிறார்.
பயத்துடன் பியூட்டி பார்லர் வெளியே காத்திருக்கும் அவள், தனது கணவன் வரவேண்டுமே என்று பதற்றமடைகிறாள். லைசன்ஸ் வாங்காமல் பார்லர் நடத்தி வந்த குற்றத்துக்காக பார்லரை அடைத்து சீல் வைக்கப் போகிறார்கள். அதற்குள் கணவன் ஆதி வந்துவிடுகிறான். ஏன் சார் கடையை குளோஸ் பண்றீங்க என்கிறான். அப்போது அங்கு வந்து இறங்குகிறார்கள் மாமியாரும் மருமகளும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu