கொலைகாரிக்கு இடமில்லை! கோபத்தில் கொந்தளித்த சந்தியாவின் மாமியார்... !
காவல்துறையில் தான் சாதிக்க வேண்டும் இதுதான் என வாழ்நாள் லட்சியம் என்று இருந்த சந்தியாவுக்கு வேலையும் கிடைத்து அதன்மூலம் சமூகத்தில் மரியாதையும் அதிகரித்துள்ளது. காவல்துறை ஒரு என்கவுண்டரை சந்தியாவுக்கு வழங்குகிறது. அதனை செய்து முடிக்க ஆணையிட்டுள்ளனர் உயர் அதிகாரிகள். அதற்காக ரௌடியைத் தேடி சுட்டுக் கொல்கிறார் சந்தியா.
சந்தியாவின் போராத காலம் அவர்கள் என்கவுண்டருக்கு திட்டமிட்டுருந்த இடத்தில் சந்தியாவின் மாமியாரும் இருந்திருக்கிறார். ரௌடியின் மேல் பாய்ந்த குண்டு அவனின் உடல் ரத்தத்தை பீய்ச்சிட்டு அடிக்க அது மாமியாரின் முகத்தில் தெறித்து ரணகளமாக மாறிவிட்டது.
இத்தனை பெரிய ஷாக்கை தாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்ற மாமியார். சந்தியா ஒரு கொலைகாரி எனவும் அவளை இந்த வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் எனவும் கத்தி கூப்பாடு போடுகிறாள். இதுதான் இந்த வாரத்தில் ராஜா ராணி 2 தொடரில் நடக்கப்போகும் கதையாக இருக்கிறது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆல்யா மானசாவால் மிகவும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதன் இரண்டாம் பாகத்திலும் சந்தியா ரோலில் ஆல்யா மானசா நடித்திருந்தார். ஆனால் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போவதாக இருந்த நிலையில், அந்த தொடரிலிருந்து விடைபெற்றுக் கொண்டார். பின் அவர் நடித்த சந்தியா கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக ரியா என்பவரை அறிமுகப்படுத்தினார்கள்.
பல வாரங்களாக அவர்தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். விறுவிறுப்பான கதைக்களத்தில் சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2வில் இன்னும் ஒரு மாற்றமாக ரியாவும் தொடரிலிருந்து விடைபெற்றார். அவருக்கு பதிலாக ஆஷா கௌடா அறிமுகமானார். கோகுலத்தில் சீதை எனும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான நாடகத்தில் நடித்து பிரபலமானவர் ஆஷா
ராஜா ராணி தொடரிலிருந்து விலகிய ரியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்துள்ளது ஜீ தமிழ். சண்டைக் கோழி என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரட்டை ரோஜா தொடருக்குப் பதிலாக இந்த தொடர் வரும் என்று கூறுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu