ராஜேஷ் இயக்கும் புதியபடத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன்
Priyanka Mohan Actress- ராஜேஷ், ஜெயம் ரவி கூட்டணியில் தயாராகும் புதிய படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்க இருப்பதாகக் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடராஜன் சுப்ரமணியம்(நட்டி), வி.டி.வி கணேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஜெயம் ரவியுடன் கடைசியாக 2017 இல் வெளியான வனமகனில் இசையமைத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் கம்பேக் கொடுப்பதால் அவரது ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ப்ரியங்கா மோகன், அதையடுத்து சூர்யா உடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் உடன் இரண்டாவது முறையாக டான் படத்தில் நடித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu