'இனி பாதுகாவலர்கள், பாதுகாப்பு தேவைப்படாது' - கராத்தே, குத்துச்சண்டை கற்கிறார் நடிகை சமந்தா

நடிகை சமந்தா
தற்காப்பு கலை பயிற்சி எடுக்கிறார் நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா 'பேமிலிமேன் 2' என்ற வெப் தொடரில் நடித்து, இந்தி திரையுலகிலும் பிரபலமானார். இதில் பெண் போராளியாக வந்து, அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
இதையடுத்து மீண்டும் ராஜ் மற்றும் டீ கே இயக்கும் இந்தி வெப் தொடரில் நடிக்க இருக்கிறார். இதில் இந்தி நடிகர் வருண் தவானும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த தொடரிலும் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் இருப்பதால், தற்காப்பு கலையை கற்றுக் கொள்ளும்படி படக்குழுவினர் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, தற்காப்பு கலை பயிற்சியை தற்போது சமந்தா தொடங்கி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரபல தற்காப்பு கலைஞர்கள் மும்பைக்கு வந்து, சமந்தாவுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.
குத்துச்சண்டை, கராத்தே உள்ளிட்ட பல சண்டை பயிற்சிகளை கற்று வருகிறார். பயிற்சி முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
நடிகை சமந்தா கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட சண்டை பயிற்சிகள் பெறுவதை அறிந்த நெட்டிசன்கள், 'இனி பொது இடங்களுக்கும், படப்பிடிப்பு தளங்களுக்கும் பாதுகாவலர்கள் உதவியின்றி சமந்தா தனியாகவே சென்றுவரலாம். தற்காப்பு கலைகளை கற்பதால், அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை, என கலாய்க்க துவங்கியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu