கமலுக்கு மகளாகவும் நடித்த மீனா! அடடே..!

கமலுக்கு மகளாகவும் நடித்த மீனா! அடடே..!
X
நடிகர் கமல்ஹாசனுக்கும் மகளாக நடித்திருக்கிறாராம் மீனா.

நடிகை மீனா ரஜினிகாந்துக்கு மட்டுமல்ல, கமலுக்கும் மகளாக நடித்துள்ளார். இந்த தகவல் உங்களுக்கு புதியதாக இருந்தால், தொடர்ந்து படியுங்கள்.

அட.அப்படியா எந்த படத்தில் என நீங்கள் கேட்டால், இது தமிழ் படத்தில் அல்ல. ஹிந்தியில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்துள்ளார் மீனா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு, அஜித்குமார், விஜய் என பலரோடு நடித்துள்ளார் நடிகை மீனா. அதிலும் இவர் ரஜினியுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இப்போது தாய் வேடத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், ரஜினியின் தாயாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என சமூக வலைத்தளங்களில் கேலி பேசி வருகின்றனர்.

மீனா ரஜினிக்கு மகளாக மட்டுமின்றி கமலுக்கும் மகளாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் வெளியான யாட்கார் எனும் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். பின்னாளில் அவ்வை சண்முகி படத்தில் கமல்ஹாசன் ஜோடியாகவே நடித்துவிட்டார் மீனா. இப்படி இருபெரும் கதாநாயகர்களுக்கு மகளாகவும், ஜோடியாகவும் நடித்திருக்கிறார் மீனா.

Tags

Next Story