கயல் ஹீரோயின் சைத்ராவுக்கு என்னாச்சு?

கயல் ஹீரோயின் சைத்ராவுக்கு என்னாச்சு?
X
கயல் ஹீரோயின் சைத்ரா திடீரென உணர்வுப்பூர்வமான பதிவிட்டு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

என் விதி என்னை இப்படி ஆக்கிவிட்டிருக்கிறது. இது போல ஆகும் என்று தான் கனவிலும் நினைத்ததில்லை என கயல் சீரியல் ஹீரோயின் சைத்ரா ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருபவர் சைத்ரா. இவர் பொழுதுபோக்கு துறைக்கு வந்து 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

சீரியலிலும் இப்போது சினிமா நடிகைகளுக்கு இருக்கும் மவுசு இருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் சீரியல் நடிகைகளுக்கும் குவிகிறார்கள். அவர்களின் அப்டேட்டுகளுக்காக காத்திருக்கிறார்கள். சினிமா மாதிரி இல்லாமல் சீரியலில் கதாநாயகிகளுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் டாப்பாக ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலின் கதாநாயகி சைத்ரா ரெட்டி தனது சினிமா பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொடரில் பிரியா பவானி ஷங்கருக்கு பதிலாக பிரியா கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சைத்ரா. அந்த தொடரில் 3 மாதங்களே நடித்திருந்தாலும் நல்ல பெயரையும் பெற்றார். அந்த சீரியலுக்கு பிறகு வில்லி வேடத்தை விரும்பி ஏற்று நடித்தார்.

யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார் சைத்ரா. இதனைத் தொடர்ந்து அஜித்துடன் வலிமை படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகே கயல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கயல் சீரியலுக்கு பிறகே சைத்ராவுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. கயல் தொடரில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இதில் ஏகப்பட்ட பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன. இதையெல்லாம் மீறி தனது திருமணத்தை நடத்துகிறாரா இல்லையா என்பதே அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 வருடங்களை கலைத் துறையில் கடந்துள்ள சைத்ரா அதுகுறித்த பதிவை வெளிப்படுத்தியுள்ளார்.

10 வருட வாழ்க்கைப் பயணத்தை திரும்பி பார்க்கும்போது இதயம் நன்றியுடன் நிரம்பியுள்ளது எனவும் என்னை வடிவமைப்பதில் இயக்குநர்களின் தொலைநோக்கு பார்வையும், வழிகாட்டுதலும், ஒளிப்பதிவாளர்களின் சிந்தனைகளும் ஒப்பனைக் கலைஞர்களின் கைத்திறன்களும் அடங்கியிருப்பதாக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

சக நடிகர்களுக்கும், தோழமையுடன் பழகிய தோழிகளுக்கும், குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குடும்பமாக இருக்கும் ரசிகர்களுக்கு சிறப்பு நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story