கில்லி தனலட்சுமிங்க நானு! வந்த வாய்ப்ப விட்டுட்டேனே..! கதறி அழும் நடிகை!
ரீரிலீஸ் செய்யப்பட்ட தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொறுக்குகிறது. இந்த படம் தற்போது 10 கோடி வசூலையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு இன்று வரையிலும் புழுங்கி அழுது கொண்டிருக்கிறாராம் பிரபல நடிகை ஒருவர்.
பல முன்னணி நடிகர்களின் படங்கள், தமிழ் சினிமாவின் மைல்கற்களாகப் போற்றப்படுகின்றன. ஒரு தசாப்தத்தைக் கடந்து, இந்தப் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும்போது, ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதை நம்மால் காணமுடிகிறது. அப்படிப்பட்ட திரைப்படங்களில் முக்கியமானது தளபதி விஜய்யின் 'கில்லி'.
2004-ல் இயக்குநர் தரணி இயக்கத்தில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவானது கில்லி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படம், அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக மாறியது. விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், விஜய்யின் அசத்தல் நடிப்பு, வித்யாசாகரின் பின்னணி இசை என ரசிகர்களை மகிழ்வித்த 'கில்லி', தொடர்ந்து பல்வேறு தளங்களில் பேசப்பட்டது.
கில்லி படத்தில் நாயகியாக திரிஷா தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் முதலில் முத்துப்பாண்டியிடம் மாட்டிக் கொண்டு விஜய்யின் உதவியால் தப்பித்து வரும் இடத்தில் ஃபைலை தவற விட்டுவிட்டு, பின் எதிரிகளிடம் மாட்டிக் கொண்ட ஒவ்வொரு சமயத்திலும் வேலு அவரைக் காப்பாற்றிக் கொண்டு வருவார். தனலட்சுமியை சென்னையில் தனது வீட்டில் மறைமுகமாக வைத்திருக்கும் வேலு, ஒரு கட்டத்தில் தனது அப்பாவிடம் மாட்டிக் கொள்கிறார். இதற்கும் தனலட்சுமிதான் காரணம்.
பிரகாஷ் ராஜ் அங்கேயே தேடி வந்துவிட, கடைசியாக அவரை எதிர்கொள்கிறார் விஜய். இப்படியாக படம் முடிவடைகிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க தனலட்சுமி நம் மனதில் பதிந்துவிடுவார். வேலுவுக்கும்தான். அப்படி ஒரு கதாபாத்திரத்தை தரணி, கொண்டு சென்றது முதலில் திரிஷாவிடம் இல்லையாம். நடிகை கிரணிடம்தான் முதலில் இந்த பாத்திரம் சென்றிருக்கிறது. ஆனால் அவர் மறுத்துவிடவே இந்த பாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார்.
இப்படம் 8 கோடி பொருட்செலவில் உருவாகி கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்த பிளாக்பஸ்டர் படமாகும் இதனை மிஸ் செய்துவிட்ட கிரண் அன்று முதல் இன்று வரை அழுது கொண்டிருக்கிறாராம். இந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் கிரணின் வாழ்க்கையே மாறியிருக்கும்.
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பயன்படுத்தி, 'கில்லி' திரைப்படம் 4K தெளிவுத்திறனுக்கு மேம்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், 2024-ல் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பழைய படமா என்று இளம் தலைமுறை அலட்சியம் காட்டாமல், விஜய் ரசிகர்களோடு சேர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினர். முதல் வாரம் முடிவதற்குள் உலகளவில் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியது ‘கில்லி’.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் 'கில்லி' மறுவெளியீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தின் இதர பகுதிகளைப் போலவே, விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஒரு சில திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சில திரையரங்குகள் கூடுதல் காட்சிகளை அதிகரித்தன.
இந்தியப் படங்கள் உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ளன. 'கில்லி' படத்தின் மறுவெளியீடு சர்வதேச அளவில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகள் உட்பட விஜய் ரசிகர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் 'கில்லி' மிகச்சிறந்த வசூலைப் பெற்றுள்ளது.
'கில்லி'யின் மறுவெளியீடு வசூல், அதன் முதல் வெளியீட்டின் வசூலை மிஞ்சக்கூடும் என்று திரையுலக வல்லுநர்கள் கணிக்கின்றனர். இது நிகழ்ந்தால், தமிழ் சினிமா வரலாற்றில் கில்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. கில்லியின் வெற்றி, பிற தயாரிப்பாளர்களையும் பழைய வெற்றிப்படங்களை மீண்டும் வெளியிடத் தூண்டக்கூடும்.
இது விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உறுதிசெய்கிறது. தமிழ் சினிமாவின் பொக்கிஷத் திரைப்படமாக கில்லி என்றும் நிலைத்திருக்கும்.
உலக அளவில் ரீரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் முதல் நாளிலேயே 8 முதல் 10 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இரண்டாவது நாளில் தமிழகத்தில் 3.5 கோடி வசூலைப் பெற்றுள்ளது. மூன்றாவது நாளான திங்கட்கிழமையும் கூட்டம் அலைமோதியது. சென்னையில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் கூட்டம் எகிறியது. மூன்று நாட்கள் முடிவில் 15 கோடி வசூல் ஈட்டியிருக்கிறது. இந்நிலையில் 4வது நாளான இன்று மேலும் 1 கோடி ரூபாய் வசூல் கிடைத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
’டைட்டானிக்’ ’அவதார்’ ’ஷோலே’ உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டபோது கிடைத்த வசூலைக் காட்டிலும் அதிக வசூல் சாதனையைப் படைத்துள்ளது கில்லி திரைப்படம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu