அவங்களா இவங்க..? இளைஞர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

அவங்களா இவங்க..? இளைஞர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!
X
எளியவர்களுக்கும் மிகவும் அறிமுகமானவராக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் புகைப்படங்களைப் பார்த்தவர்கள் அவங்களா இவங்க என ஆச்சர்யத்துடன் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சீரியலில் நான்கு கதாநாயகிகள் தங்களின் உரிமைக்காக போராடும் போராட்டம் எந்த கட்டத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆண்களின் அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு என்ன என்ன தடையாக வந்தது என இந்த தொடர் ஒரு பெண் உரிமை சார்ந்த தொடராகவே செல்கிறது. இந்த தொடரின் உண்மையான நாயகியாக தெலுங்கு நடிகை மதுமிதா ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


சமீப காலங்களில் வெள்ளித் திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கென்றே தனியாக ஃபோட்டோஷூட் செய்து அவர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள். அந்த வகையில் சமீபத்திய சென்சேசன் சின்னத்திரை நடிகை மதுமிதாதான். எதிர்நீச்சல் தொடரில் ஹோம்லியாக நடித்தாலும், ஃபோட்டோஷூட் ஒவ்வொன்றும் இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் மிகவும் தாராளமானதாக இருக்கின்றன.


கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதா, பின் தெலுங்கு பக்கமும் முயற்சி செய்து பெரிய பலன் கிடைக்காமல் தமிழில் அறிமுகமானார். தமிழக ரசிகர்கள் அவரை அள்ளி அனைத்துக் கொண்டனர். எதிர்நீச்சல் தொடரை இவருக்காகவே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். மற்ற தொடர்களைவிட தனித்துவமாக இருக்கும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது கதைக்களம் சூடு பிடித்து மிகவும் பிரம்மாண்டமாக சென்று கொண்டிருக்கிறது.


தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார் மதுமிதா. எளியவர்களுக்கும் மிகவும் அறிமுகமானவராக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகிறார்.

சில புகைப்படங்களில் கிளாமரும் எட்டிப் பார்க்கிறது. அந்த ஜனனியா இது என பலரும் வாயைப் பிளக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags

Next Story