பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!

அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இருக்கும் பிரச்னை தொடர்ந்து இணையதளத்தில் வெடிக்க அது பெரிய பேசுபொருளானது. இந்நிலையில் இந்த டாபிக்கை சென்னை வெள்ளம் மூழ்கடித்தது என்றே சொல்லலாம். ஆனால் மழை வெள்ளம் மூழ்கினாலும் அமீரிடம் தொடர்ந்து பேட்டி கண்டு யூடியூப் சேனல்கள் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வைரலாகி வரும் பழைய வீடியோ ஒன்றில் அமீர் தனது முதல் படம் குறித்து பேசியுள்ளார்.
மௌனம் பேசியதே போன்ற ஒரு படத்தை தனது முதல் படமாக எடுக்க நினைக்கவில்லை என அமீர் கூறியுள்ளார். மேலும் பருத்திவீரன் கூட தன்னுடைய முதல் படமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தான் முதல் படமாக எடுக்க நினைத்த கதை குற்றவாளி. அது கிட்டத்தட்ட ஒரு கைதி பற்றிய படம்.
மதுரை மண்ணின் வாசம் மாறாமல், எந்த ஒரு பாடல் காட்சியும் இல்லாமல் 2000ம் ஆண்டில் இந்த படத்தை எடுக்க நினைத்து தான் அலைந்து கொண்டிருந்ததாகவும் யாரும் வாய்ப்பு தரவில்லை என்றும் பலரும் திட்டியதாகவும் கூறியுள்ளார் அமீர்.
காதல் கதைகளைச் சுற்றி அனைத்து திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீ என்னப்பா குற்றவாளியைப் பற்றி கதை சொல்லுகிறாய் இது சரியாக வராது என்று தன்னிடம் சொல்லிவிட்டதாக அமீர் தெரிவிக்கிறார். வாழ்வியல் குறித்த படம்தான் எனது முதல்படமாக வரவேண்டும் என நினைத்து அந்த கதையை எழுதியதாக கூறியிருந்தார் அமீர்.
அதனால்தான் காதல் கதையான மௌனம் பேசியதே கதையை சொன்னேன். உடனடியாக கதவு திறந்தது. நல்லவேளையாக அந்த படத்துக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதே நேரம் நான் என்னுடைய சினிமா வாழ்க்கையிலேயே சுமாரான படமாக மௌனம் பேசியது இருக்கிறது.
அடுத்து சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை எடுக்கிறார். அதுதான் ராம். அந்த படத்துக்கு திலீபன் என்று பெயர் வைத்திருந்ததாகவும், ஆனால் அந்த தலைப்பு அண்ணன் சீமானிடம் இருந்ததாகவும் தெரிவித்தார். அவரிடமிருந்து தலைப்பை பெறுவதில் சிக்கல் இருந்ததால் படத்துக்கு ராம் என்று பெயர் வைத்தேன்.
குற்றவாளியை ஏன் எடுக்கமுடியவில்லை?
குற்றவாளியில் நான் எழுதியிருந்த காட்சிகள் பல படங்களில் வந்துகொண்டிருக்கிறது. காலம் தாண்டிக் கொண்டே இருக்கிறது. தொடக்க கதை நந்தாவில் வந்துவிட்டது. சுப்ரமணியபுரம் படத்திலும் இந்த கதை வருகிறது. நம்மை சுற்றி இருப்பவர்களிடம் அந்த கதையை சொல்லி அதையே அவர்களும் திரைக்கதையாக எழுதியிருக்கிறார்கள். அதை திருட்டு என்று சொல்லிவிட முடியாது. அது அவர்களின் இன்ஸ்பிரேசனாக கூட இருக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu