தனுஷின் குபேரா எப்ப ரிலீஸ் தெரியுமா?

தனுஷின் குபேரா எப்ப ரிலீஸ் தெரியுமா?
X
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது.

நடிகர் தனுஷுக்கு அடுத்தடுத்து பல படங்கள் லைனில் காத்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு ஒரு படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், அடுத்தடுத்து பல படங்களை ரிலீஸ் செய்துவிட்டார். தற்போது ராயன், குபேரா உள்ளிட்ட 4 படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன. இந்நிலையில், குபேரா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.


தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள ராயன் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக தனுஷ், நாகர்ஜூனா இணைந்து நடித்துள்ள குபேரா திரைப்படமும் கிளைமேக்ஸை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த மாதம் பேட்ச் ஒர்க் என அனைத்து பணிகளும் முடிந்து டப்பிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வழியாக அறிவித்து விட்டது சன்பிக்சர்ஸ் நிறுவனம். வரும் ஜூலை 26 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும். அதற்கு முன்னதாக ஜூலை 12 ஆம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாக இருப்பதால், இரண்டு வாரங்கள் கழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.


தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ராயன் பட ரிலீஸுக்கு பிறகு குபேரா படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளையும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இப்போதே படத்தின் ஷூட்டிங் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தில் அவருடன் இணைந்து நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கில் தனுஷ், நாகர்ஜூனா மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது.


இடையிடையே பிரேக் எடுத்துக் கொண்டு தனுஷ் இந்த படத்திலிருந்து இளையராஜா பயோபிக் திரைப்பட வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறாராம். ராயன் படத்தையும் முடிக்க சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் ஃபிளைட்டில் பறந்து கொண்டிருப்பதாக தகவல்.

தனுஷுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைகிறது. ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் ஓரளவு வசூலையும் கொடுத்தது. அடுத்ததாக அவரது சொந்த இயக்கத்தில் ராயன் திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. குபேரா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் அடுத்ததாக தயாராகிறது. இந்த படமும் இதே ஆண்டில் ரிலீஸாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


அடுத்ததாக இவரது இயக்கத்தில் இன்னொரு படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படமும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து இளையராஜா பயோபிக் திரைப்படம் 2025 ஜூனில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story