தனது 50வது படத்தை, டைரக்ட் செய்யப் போகிறாரா தனுஷ்?
dhanush 50th movie update- நடிகர் தனுஷ்
Dhanush's 50th film is with Sun Pictures, dhanush 50th movie update- வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து படங்களில் 'பிஸி'யாக நடித்து வரும் தனுஷின் 50-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது 'வாத்தி' திரைப்படம் தயாராகி உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார் தனுஷ். வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தை ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அதில் அப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனுஷே இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஒருவேளை தனுஷ் இயக்கினால், அதில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் தனுஷுடன் நடிப்பார்கள் என்றும் அப்படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம் இது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்த மூவரின் யார் அந்த படத்தை இயக்கப்போகிறார்கள் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷ், பல படங்களில் தன்னை ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்திருக்கிறார். நல்ல, நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துவக்கத்தில், தனுஷின் ஒல்லியான உடல்வாகை பார்த்து, அவரை பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், நாளடைவில் அவர் நல்ல நடிகராக பல படங்களில் நடித்து வெற்றி பெற்ற பிறகு, அவரை பாராட்ட துவங்கினர். பொல்லாதவன், ஆடுகளம், மாரி, கர்ணன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் அவரது வெற்றி தொடர்ந்தது.
பிரபல முன்னணி இயக்குநரான தனுஷின் அண்ணன் செல்வராகவன் போலவே, படங்களை டைரக்ட் செய்வதிலும் தனுஷிற்கு ஆர்வம் உள்ளது. இதன்காரணமாக, அவரது 50வது படத்தை, தனுஷ் இயக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu