ஓடிடியில் வெளியாகும் டாடா திரைப்படம்! எப்போ? எங்கே ?

ஓடிடியில் வெளியாகும் டாடா திரைப்படம்! எப்போ? எங்கே ?
X
Dada OTT Release Date And Time-கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவான டாடா திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாக இருக்கிறது.

Dada OTT Release Date And Time-கவின் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய டாடா திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசன், தனுஷ், கார்த்தி ஆகியோர் பாராட்டியிருக்கிறார்கள். மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலரும் இந்த படத்தை திரையரங்கில் கண்டதாக கூறி பாராட்டியிருக்கிறார்கள். இப்போது இந்த படம் ஓடிடியில் வரும் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 10ம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது டாடா திரைப்படம். லிப்ட் படத்தைத் தொடர்ந்து கவின் நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம். கவின் நடித்து திரையரங்கில் வெளியாகும் முதல் திரைப்படம் என பல விசயங்களைச் சுமந்து வெளியாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? கதை என்கேஜிங்காக இருக்கிறதா? திரைக்கதை சுவாரஸ்யம் இருக்கிறதா? கவின் உள்ளிட்ட மற்ற அனைவரின் நடிப்பும் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல விசயங்களை அலசுவோம்.

விமர்சனம்

கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராக வரும் மணிகண்டன் (கவின்) உடன் படிக்கும் மாணவி சிந்து (அபர்ணா தாஸ்) இருவரும் காதலிக்கிறார்கள். பல இடங்களில் சுற்றித் திரிந்தும் தனிமையிலும் காதலை வளர்க்கிறார்கள். கவனக்குறைவாக இருந்ததால் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே கர்ப்பம் தரிக்கிறார் சிந்து. இதனால் பெற்றோர்கள் கைவிட, நண்பர்களின் உதவியுடன் சிறிது சமாளிக்கிறார்கள். பணக் கஷ்டம் இவர்களை போட்டு ஆட்டி வதைக்கிறது. இருப்பிடம், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம், மருத்துவத்துக்கு தேவைப்படும் செலவு என நாயகன் மணிகண்டன் கதறுகிறான். இதனால் கொஞ்சம் பொறுப்பற்று இருக்கும் நாயகனை நாயகி சிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பிக்கிறாள்.

குழந்தை பிறந்ததும் இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகமாக குழந்தையை விட்டுவிட்டு பெற்றோருடன் செல்கிறார் சிந்து. இதனால் மணிகண்டனே குழந்தையை வளர்க்கும் நிலை உருவாகிறது. அப்பா - மகன் உறவு துவங்குகிறது. இதன்பிறகு என்ன ஆனது, மனைவியுடன் சேர்கிறாரா இல்லை தனியே மகனை வளர்த்து ஆளாக்குகிறாரா என்பதே கதை.

இயக்குநரின் கதை சொல்லல் ஏற்கனவே கணிக்கும்படியாக இருந்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. கவின் நடிப்பு பிரமாதம். அவர் கதாபாத்திரத்தை சுமந்து செல்லும் விதம் மிக அருமை. அடுத்த சிவகார்த்திகேயனாக ஆனால் சூர்யா, விக்ரம் போல தேர்ந்தெடுத்த கதைக்கு கடுமையாக உழைக்கும் நாயகனாக வளர வாய்ப்பிருக்கிறது.

அபர்ணா தாஸ் - கவின் இருவருக்கும் இடையே வரும் காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. இயல்பாகவே காதலர்கள் எப்படி இருப்பார்களோ அதன்படி அமைந்திருக்கிறது.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சி தவிர்த்து பார்த்தால் படம் ஒரு நல்ல ஃபீல்குட் படமாக வந்திருக்கிறது. ஆதலால் காதல் செய்வீர் வகையில் ஒரு படமாக எடுக்க வேண்டும் என நினைத்து இயக்குநர் இந்த கதையை எழுதினாரா என்பது தெரியவில்லை.


ஓடிடி தகவல்கள்

படம் - டாடா

இயக்கம் - கணேஷ் கே பாபு

நடிப்பு - கவின், அபர்ணா தாஸ்

திரையரங்கில் வெளியீடு - பிப்ரவரி 10, 2023

ஓடிடி தளம் - அமேசான் பிரைம்

வெளியீட்டு தேதி - மார்ச் 10, 2023


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்