/* */

ஆர்யா நடித்த 'கேப்டன்' பட டிரைலர் 22 ம் தேதி ரிலீஸ்

Captain Tamil Movie Arya- ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கிய 'கேப்டன்' படத்தின் டிரைலர், வரும் 22ம் தேதி வெளியாகிறது.

HIGHLIGHTS

ஆர்யா நடித்த  கேப்டன் பட டிரைலர்  22 ம் தேதி ரிலீஸ்
X

captain tamil movie ஆர்யா - வித்யாசமான ப்ரிடேட்டர் அர்னால்ட் ‘லுக்’கில் அசத்தும் நடிகர் ஆர்யா

captain tamil movie arya - நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். இவர், தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில், 'கேப்டன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலரை, வரும் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு, வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


அதற்கான அறிவிப்பை இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களுமே, ஹாலிவுட் படங்களின் கதை சாயலில், வித்தியாசமான கதை களத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. அதுபோல் இந்த 'கேப்டன்' படமும் புதுமையாக இருக்கும் என படக் குழுவினர் கூறுகின்றனர். இதில் ஆர்யா ராணுவ வீரராக நடிக்கிறார், டி இமான் இசையமைக்கிறார்.

தெறிக்கவிடும் ஆர்யா: 'பர்ஸ்ட் லுக்'கில் இடம்பெற்றிருக்கும் ஏலியன் உருவம், இது, ப்ரிடேட்டர் போன்ற கதையாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 11:28 AM GMT

Related News