மனிஷா விசயம் ஓகே.. பிந்து மாதவி பத்தி தெரியுமா?

மனிஷா விசயம் ஓகே.. பிந்து மாதவி பத்தி தெரியுமா?
X
பிந்து மாதவி விசயத்தைப் பற்றியும் பத்திரிகையாளர் பிஸ்மி சில உண்மைகளை வெளியே தெரிவித்துள்ளார். இதனால் சீனு ராமசாமிக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர்.

இயக்குநர் சீனு ராமசாமியா இப்படித்தான் என்றும், அவர் மீது சொன்ன குற்றச்சாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நடிகை மனிஷா யாதவ் உறுதியாக தெரிவித்துள்ளார். இதே வேளையில் பிந்துமாதவிக்கு நடந்த மனக்கசப்புகளையும் பலர் இணையதளங்களில் பேசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் எதார்த்தமான இயக்குநர் என பெயர் வாங்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை. அந்த படத்தைக் காண ரசிகர்கள் நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் பகீர் குற்றச்சாட்டு முன்வைத்து வீடியோ வைரலாக அதைப் பற்றி பலரும் பேசத் துவங்கிவிட்டனர்.

இயக்குநர் சீனு ராமசாமி மீது பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். அவர், சீனு ராமசாமி, நடிகை மனிஷா யாதவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு, சீனு ராமசாமி, தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட நடிகை மனிஷா யாதவ் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகை மனிஷா யாதவின் பதிவு

தனது X வலைதளத்தில், நடிகை மனிஷா யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன்.

மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதும் இணைந்து பணியாற்ற மாட்டேன். சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு" என்று கூறியுள்ளார்.

பிந்து மாதவிக்கு ஏற்பட்ட நெருடல்

சீனு ராமசாமி பலருக்கும் அறிமுகமானது நீர்ப்பறவை எனும் படத்திலிருந்துதான். அந்த படத்தில் விஷ்ணு நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக சுனைனாவும் நடித்திருந்தனர். 2012ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தது பிந்து மாதவிதான். இவர் படத்திலிருந்து இயக்குநரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் வெளியேறியதாக கூறப்படுகிறது.

தன்னை இயக்குநர் கேரவனுக்கு அழைக்கிறார் என அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்று தகவல்கள் உண்டு. அதனாலேயே சில நாட்களில் படத்திலிருந்து வெளியேறினார் பிந்துமாதவி. இந்த விசயத்தை பத்திரிகையாளர் பிஸ்மி உட்பட பலரும் பல பேட்டிகளில் பேசியுள்ளனர். பிஸ்மி இது தவிர இன்னும் சில விசயங்களை வெளியில் தெரிவித்துள்ளார்.

இப்படி நடந்துகொள்பவரா சீனு ராமசாமி என பலரும் அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர். நீல சட்டை மாறனும் தன் பங்குக்கு சீனு ராமசாமியை வெளுத்து வாங்கி வருகிறார்.

Tags

Next Story